இந்த கனவுகள் வந்தால் மிகவும் கவனமாக இருங்கள்
மனிதனுக்கு கனவு வருவது என்பது இயல்பானது தான்.இருந்தாலும் இந்து சமயத்தில் சில கனவுகள் நமக்கு எதிர் காலத்தை பற்றிய அறிகுறியை எச்சரிக்கை கொடுக்க வருவதாக கருதப்படுகிறது.அப்படியாக பலருக்கும் பலவகையான கனவுகள் வரும்.
காலையில் எழுந்து அதை பற்றி யோசித்தால் விடை கிடைக்காத அளவிற்கு அந்த கனவுகள் அமைந்து இருக்கும்.மேலும் சில கனவுகள் நமக்கு நிஜத்தில் நடந்தது போல் மிக பெரிய அச்சத்தை கொடுத்து விடும்.
அந்த வகையில் நமக்கு ஏற்படும் கனவுகளை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் சற்று கவனித்தால் சில விஷயங்களில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.நாம் இப்பொழுது எந்த கனவுகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
பற்களை இழப்பதை போன்ற கனவு:
இந்த பற்கள் இழப்பது போல் கனவு சற்று விசித்திரமானது தான்.சமயத்தில் உண்மையில் நம்முடைய பற்கள் விழுந்தது போல் உணர்வை கொடுத்து விடும்.இந்த கனவுகள் நம் நெருங்கிய உறவுகளின் பிரிதல்,இழப்பு மற்றும் பணம் கற்றாக்குறையை குறிக்கிறது.
உயரத்தில் இருந்து விழுவது போன்ற கனவு:
திடீர் என்று தூக்கத்தில் சிலர் உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு காண்பார்கள்.இவ்வாறான கனவுகள் நம்முடைய தோல்வி,நஷ்டம் போன்றவற்றை குறிக்கிறது.
பாம்புகள் அல்லது விஷ உயிரினங்களை கனவில் காண்பது:
சில நேரங்களில் பாம்புகள் விஷ பூச்சிகளை கனவில் காண்போம்.இவ்வாறான கனவுகள் நம்முடைய மறைமுக எதிரிகள் தொல்லைகள் குறித்து அறிவுறுத்துகிறது.
தீ பற்றி எரியும் வீட்டைக் கனவில் காண்பது:
திடீர் என்று தீ கனவில் காண்போம் இவை வீட்டில் நம்மை நோக்கி வரும் ஆபத்தை குறிக்கிறது.இவ்வாறு கனவு வரும் பொழுது நாம் அமைதியும் நிதானமும் கடைபிடிக்கவேண்டும்.
இறுதி சடங்கு அல்லது மரணம் பற்றிய கனவு:
சிலர் இறப்பது போல் கனவு அல்ல சமயங்களில் நாமே இறப்பது போல் கனவு வரும்.இவ்வாறு கனவு உண்டாகும் பொழுது நாம் மிகவும் வருத்தத்தில் இருப்பதையும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ளும்படி அந்த கனவுகள் வருகிறது.
ஆக இவ்வாறான கனவுகள் வருவது இயல்பு என்றாலும் அவை வரும் பொழுது நாம் கவனமாக இருந்து இறைவனை வெந்துகொள்வது அவசியம்.இறைவன் அருளால் நாம் எப்பேர்ப்பட்ட ஆபத்துகளில் இருந்து நாம் நம்மை காக்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |