நாக தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள் இதுதான்

By Yashini May 21, 2024 01:05 PM GMT
Report

ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் லக்னம் 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும்போது நாக தோஷம் உண்டாகிறது.

இந்த தோஷம் ஒருவரின் வாழ்க்கையில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும், வாழ்க்கையில் உள்ள அனைத்து பணிகளும் முடங்கும். ஆரோக்கியத்தில் கேடு போன்ற பல பிரச்சனைகள் வரும். 

நாக தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள் இதுதான் | Symptoms Of Naga Dosha And Remedy

நாகதோஷம் ஏற்பட்டால் உண்டாகும் அறிகுறிகள்

கனவில் தினசரி சண்டை, சச்சரவுகள் வருவதாக உணர்ந்தால் அது கால சர்ப்ப தோஷத்தின் அறிகுறியாகும்.

நீங்கள் காரணமின்றி இரவில் மீண்டும் மீண்டும் அச்சமுற்று எழுந்தால் அது இந்த தோஷத்தின் அறிகுறிகள் ஆகும்.

இறந்தவர்கள் கனவில் தோன்றி பிரச்சனை செய்தாலோ, யாரோ கழுத்தை நெரிப்பது போல அடிக்கடி உணர்வது.

மேலும், கனவில் பாம்பு அடிக்கடி வந்து கடிப்பதை பார்த்தாலோ இந்த தோஷம் இருப்பது உறுதியாகும்.

நாக தோஷம் இருப்பதற்கான அறிகுறிகள் இதுதான் | Symptoms Of Naga Dosha And Remedy

இதன் பரிகாரம்

ஒரு சிலருக்கு ஜாதகத்திலேயே இந்த தோஷம் இருக்கும் அவர்கள் விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் விடுபடலாம். 

சனிக்கிழமை அன்று ஓடும் நீரில் நிலக்கரி துண்டுகளையோ, பருப்பு, முழு தேங்காயை மிதக்க வைத்தாலோ தோஷம் நீங்கும் என சொல்லப்படுகிறது.

அரச மரத்தை சனிக்கிழமையன்று 7 முறை சுற்றி வர வேண்டுமாம். அமாவாசை நாட்களில் வெள்ளி நாகத்தை வழிபட்டு, ஆற்றில் அவற்றை மிதக்க விட வேண்டும்.

மேலும், அமாவாசை நாட்களில் காகம், நாய், பசுக்களுக்கு உணவு அளிப்பதும் நல்லதாகும். எளிதில் இந்த தோஷத்தில் இருந்து விடுபட வீட்டில் மயில் தோகை வைப்பது நல்ல பலனை தருமாம்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US