சனி பகவானின் முழு அருள் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்

By Sakthi Raj Mar 04, 2026 08:58 AM GMT
Report

ஜோதிடத்தில் சனிபகவான் மிகவும் முக்கிய கிரகமாக இருக்கிறார். மேலும் இவர் தான் நீதிமானாகவும் விளங்க கூடியவர். காரணம் சனி பகவானுடைய பார்வையானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உண்டாக்கும்.

சமயங்களில் அது நன்மை தீமை என்று இரண்டையும் செய்யக் கூடியதாக இருக்கிறது. அப்படியாக சனி பகவானுடைய முழு அருளும் ஒருவருக்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

சனி பகவானின் முழு அருள் இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் | Symptoms Of One Having Sani Bagavan Blessings

1.ஜோதிடத்தின் அடிப்படையில் நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது கருப்பு நாயை பார்த்தாலோ அல்லது பால் குடிப்பது போல் பார்த்தாலும் சனி பகவானின் முழு அருள் நமக்கு இருப்பதின் அர்த்தமாகும். இதன் வழியாக வாழ்க்கையில் முழு பிரச்சனையும் தீரும்.

நாளை மறுநாள் திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் சனி பெயர்ச்சி விழா

நாளை மறுநாள் திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் சனி பெயர்ச்சி விழா

2. ஜோதிடத்தில் அடைப்படையில் ஒரு பிச்சைக்காரர் சாப்பிடுவதை பார்த்தால் அது மிகவும் சுபமாக கருதப்படுகிறது. இதுவும் நமக்கு சனி பகவானின் முழு அருள் இருப்பதை உணர்த்துகிறது. இதனால் நமக்கு பொருளாதார பிரச்சனை விலகும்.

3.அதேபோல் எங்கேயாவது கருப்பு பசு அல்லது பசு பால் கொடுப்பது போல் பார்த்தாலும் அவை நமக்கு சனியின் முழு அருள் இருப்பதை உணர்த்துகிறது. இது நம் வாழ்க்கையில் நடக்க இருக்கும் மகிழ்ச்சியை குறிக்கிறது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US