ஒருவருக்கு குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள்

By Sakthi Raj May 23, 2026 05:58 AM GMT
Report

நம்முடைய குடும்பத்தை காக்கக்கூடிய குல சாமியாக நம்முடைய குலதெய்வம் இருக்கிறது. அப்படியாக, பலருக்கும் இந்த குலதெய்வத்தினுடைய அருள் முழுமையாக கிடைப்பது இல்லை. ஏதேனும் ஒரு கால சூழ்நிலையால் அவர்கள் குலதெய்வத்தின் சாபங்களை பெற்று விடுகிறார்கள்.

அந்த வகையில் நம் குடும்பத்திற்கு குல தெய்வத்தின் சாபம் இருக்கிறது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.

ஒருவருக்கு குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள் | Symptoms That Family Is Having Kuladeivam Curse

நம் குடும்பத்திற்கு குலதெய்வத்தின் சாபம் இருக்கிறது என்றால் வீடுகளில் மன அமைதியே இருக்காது. எப்போதும் கவலை பயம், கோபம் இருந்து கொண்டே இருக்கும். நிதானமாக எந்த வேலையும் செய்ய முடியாது. அதேபோல், தொழிலில் தொடர்ந்து தோல்வி வேலையில் நிலை இல்லாத தன்மை, வேலையில் முன்னேற்றம் இல்லாத நிலையை நமக்கு கொடுக்கிறது.

அதே சமயம் எவ்வளவு பணம் வந்தாலும் அது வந்த வழி தெரியாமல் செல்வதையும் நாம் காண முடிகிறது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனையும் கணவன் மனைவி இடையே சண்டை ஆகியவற்றை கொடுக்கிறது.

நீங்கள் தனுசு ராசியில் பிறந்த ஆண்களா? உங்களுக்கான சிறப்பு பலன்கள்

நீங்கள் தனுசு ராசியில் பிறந்த ஆண்களா? உங்களுக்கான சிறப்பு பலன்கள்

உடல் நலத்தில் சிறு சிறு உபாதைகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும். எவ்வளவுதான் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் காரணமே இல்லாமல் நமக்கு நிறைய பிரச்சனைகள் வரும்.

முக்கியமாக இரவு நேரங்களில் சரியாக தூக்கம் இருக்காது. உறங்கினாலும் அமானுஷ்ய கனவுகள் வந்து செல்லும். அதேப்போல் எளிதில் நமக்கு கண் திருஷ்டி ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. முக்கியமாக குலதெய்வம் மனதில் நினைக்க முடியாத அளவிற்கு மனதில் இருள் சூழ்ந்து இருக்கும்.

ஒருவருக்கு குலதெய்வம் சாபம் இருப்பதை உணர்த்தும் முக்கியமான அறிகுறிகள் | Symptoms That Family Is Having Kuladeivam Curse

குலதெய்வம் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் வராது. முக்கியமான காரியங்கள் செய்யும்பொழுது கடைசி நேரத்தில் அந்த காரியத்தில் தடை ஏற்பட்டுவிடும். இவ்வாறான விஷயங்கள் நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் கட்டாயமாக குலதெய்வத்தின் சாபம் இருப்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

அப்பொழுது நீங்கள் நிச்சயமாக எவ்வளவு இக்கட்டான நிலை இருந்தாலும் குலதெய்வம் ஆலயம் சென்று தேங்காய், பூ, பழம் சமர்ப்பித்து வழிபாடு செய்து வாருங்கள் நிச்சயம் உங்களுடைய வாழ்க்கை வளமாக மாறும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US