சிம்மத்திற்கு மாறும் சூரியன்: ராஜயோகம் பெற போகும் ராசிகள்
ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் மாறுதலை சந்திக்கும். இப்பொழுது வருடத்தின் 8-வது மாதத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன் உள்ளிட்டவற்றில் சனி பகவானின் இயக்கமும் மாறப்போகிறது.
இந்த மாற்றத்தால் ஆகஸ்ட் மாதம் சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. சனி, சூரியன், செவ்வாய், புதன், குரு, சந்திரன் மற்றும் மிதுனம் - சுக்கிரன் ஆகியோரின் இயக்கத்தால் எந்த ராசிகளுக்கு யோகத்தை வழங்க போகிறது என்று பார்ப்போம்.
மிதுனம்
ஆகஸ்ட் மாதம், மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல சிந்தனை மேலோங்கும். புதிய தொழில் தொடக்கம் பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
குடும்ப வாழ்க்கையில் சந்தோசம் நிலவும்.அலுவலகத்தில் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.தாய் வழி தந்தை வழி உறவுகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் திருப்பங்கள் உண்டாகும்.
நீண்ட நாள் எதிர் பார்த்த பணம் வீடு வந்து சேரும். குடும்பத்தில் பிள்ளைகளின் வளர்ச்சி உங்களை மகிழ்ச்சி உண்டாக்கும்.கணவன் மனைவி இடையே நல்ல பந்தம் உருவாகும்.
கன்னி
ஆகஸ்ட் மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு மங்களம் நிறைந்த மாதமாக இருக்கிறது.இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும்.
கடவுள் வழிபாடு நன்மை உண்டாக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும்.பிள்ளைகளுடன் நல்ல நேரம் செலவிடுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |