தமிழ் புத்தாண்டு சிறப்பு ராசி பலன் (14-04-2026)

Report

மேஷம்:

குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சுப காரியம் செய்திகள் உங்களை வந்து சேரும்.

ரிஷபம்:

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டு நடப்பீர்கள். உடன் இருப்பவர்களை பற்றிய நல்ல புரிதல் உண்டாகும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு முக்கியமான நாளாக அமையப்போகிறது.

மிதுனம்:

இன்று புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் ஆன்மீக வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள். எதிலும் பதற்றமில்லாமல் செயல்படுவதால் வெற்றியை அடையலாம். சிறந்த நாள்.

வாஸ்து: இந்த திசையில் பணம் வைத்தால் பொருளாதார கஷ்டமே வராதாம்

வாஸ்து: இந்த திசையில் பணம் வைத்தால் பொருளாதார கஷ்டமே வராதாம்

கடகம்:

வியாபாரத்தில் தேவையில்லாத அலைச்சல் உண்டாகலாம். ஒரு விதமான உடல் சோர்வு மனசோர்வு உண்டாகும். சக ஊழியர்களிடம் மிக கவனமாக உரையாடுவது அவசியம்.

சிம்மம்:

புதுவிதமான சிந்தனைகள் மனதில் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகத்தை பெறுவீர்கள். உயர் பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்களின் ஆதரவை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கன்னி:

புதிய வீடு மனை வாங்கும் யோசனை உருவாகும். வழக்கு சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமான முடிவை கொடுக்கும். குடும்பத்தில் பொருளாதாரத்தை உயர்த்த சில முக்கிய முயற்சிகள் செய்வீர்கள்.

துலாம்:

உயர் பதவியில் இருப்பவர்களின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். வெளி வட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு உயரும். குழந்தைகளின் கல்வி குறித்து சில மனக் கவலைகள் வரலாம்.

விருச்சிகம் :

இன்று திட்டமிட்டு எந்த வேலையையும் சரியாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மன நிறைவு கிடைக்கும்.

2026: அட்சய திருதியை அன்று உருவாகும் 7 ராஜ யோகங்கள்.. உயரத்தை தொடும் 3 ராசிகள்

2026: அட்சய திருதியை அன்று உருவாகும் 7 ராஜ யோகங்கள்.. உயரத்தை தொடும் 3 ராசிகள்

தனுசு:

குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். ஒரு சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை வரலாம். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

மகரம்:

எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி அடையலாம். உயர் அதிகாரிகளிடம் தேவை இல்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு கிடைக்கும் நாள்.

கும்பம்:

இன்று நீண்ட நாள் குழப்பத்திலிருந்து விடுபட போகிறீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை அனுசரித்துக் கொண்டு செல்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த அலைச்சல் பிரச்சனை விலகும்.

மீனம்:

இன்று சில ரகசியமான செயல்களை செய்யும் பொழுது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடன் இருப்பவர்களை பற்றி நன்கு ஆராய்ந்து செயல்பட்டால் செயல்களில் வெற்றி நிச்சயம்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US