யானை மீது அமர்ந்து காட்சி தரும் சனி பகவானின் திருத்தலம்

By Yashini Jun 08, 2024 03:00 PM GMT
Report

மத்திய பிரதேசம், இந்தூரில் அன்னபூர்ணா பகுதியில் அமைந்துள்ள சனி பகவான் கோயில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

300 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் சனி பகவானுக்காக கோபால்தாஸ் திவாரி என்பவர் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார்.

இந்தக் கோயிலுக்குச் சென்று வந்தாலே பக்தர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

யானை மீது அமர்ந்து காட்சி தரும் சனி பகவானின் திருத்தலம் | Temple Of Lord Shani Sitting On An Elephant

இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால் இங்கு அருளும் சனி பகவான் யானை மீது அமர்ந்திருக்கும் திருக்கோலம் தான்.

இந்த உருவத்தில் அவரை தரிசிக்கும்போதும் கோபம் குறைந்து, மன அமைதி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், சனி பகவான் யானையின் மீது வருவது போன்ற தோற்றத்தில் இருப்பதால் செல்வச் செழிப்பு உண்டாகும் எனவும் கூறப்படுகிறது.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US