பிரச்சனைகள் தீர அனைவரும் ஒருமுறையாவது செல்ல வேண்டிய கோயில்கள்

By Sakthi Raj Jan 19, 2025 08:36 AM GMT
Report

மனிதன் அவனுடைய பிறப்பே அவன் கர்ம வினைகள் கழிப்பதற்காக எடுக்கப்டடது.எத்தனை பெரிய பணம் படைத்தவனாக இருந்தாலும் அவன் கர்ம வினையில் இருந்து அவன் எந்த வழியை கொண்டும் தப்பித்து செல்லமுடியாது.

இருந்தாலும் அவனுடைய இறைவழிபாட்டை கொண்டு அவனுக்கு வரும் துயரின் வலியை குறைக்க முடியும்.அதே போல் தவம் செய்வதாலும் தர்ம சிந்தனையாலும் அவன் மனதை தூய்மை செய்யமுடியும்.அதோடு இறைவனின் பரிபூர்ண அருள் கிடைக்க அவன் பல்வேறு இடங்களில் இருக்கும் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.

அவ்வாறு நாம் ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்து வரும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் மாற்றத்தை காண முடியும்.அதனால் தான் ஜோதிடத்தில் மக்கள் துயர் ஏற்ப பரிகார தலங்கள் பரிந்துரைக்க படுகிறது.

அங்கு சென்று வர நிச்சயம் நாம் சந்தித்து வரும் பிரச்சனையின் தாக்கம் குறையும்.அப்படியாக நாம் இப்பொழுது மனிதனுக்கு உண்டாகும் பிரச்சனைகளுக்கு ஏற்ப சென்று வழிபட வேண்டிய அற்புத ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.

பிரச்சனைகள் தீர அனைவரும் ஒருமுறையாவது செல்ல வேண்டிய கோயில்கள் | Temples We Must Visit During Tough Times 

ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்

1. அமிர்தகடேஸ்வரர் கோவில்,திருக்கடையூர்

2. எமனேஸ்வரமுடையார் கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி

3. காலகாலேஸ்வரர் கோவில், கோவில்பாளையம்,

4. சித்திரகுப்தசுவாமி கோவில், காஞ்சிபுரம்,

5. தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி,

6. ஞீலிவனேஸ்வரர் கோவில். திருப்பைஞ்ஞீலி.

7. வாஞ்சிநாதசுவாமி கோவில், வாஞ்சியம்.

குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க பெற்றோர்கள் இதை செய்தால் போதும்

குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க பெற்றோர்கள் இதை செய்தால் போதும்

எதிரி பயம் போக்கும் பரிகார தலங்கள்

1. அங்காளம்மன் கோவில், மேல்மலையனூர்.

2. அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.

3. காலபைரவர் கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.

4. காளமேகப்பெருமாள் கோவில், திருமோகூர்.

5. காளிகாம்பாள் கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.

6. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் கோவில்,அதியமான்கோட்டை.

7. தில்லைகாளியம்மன் கோவில், சிதம்பரம்.

8. பிரத்யங்கராதேவி கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.

9. மாசாணியம்மன் கோவில், ஆணைமலை.

10. முனியப்பன் கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.

11. ரேணுகாம்பாள் கோவில், படவேடு.

12. வெட்டுடையார் காளியம்மன் கோவில், கொல்லங்குடி

பிரச்சனைகள் தீர அனைவரும் ஒருமுறையாவது செல்ல வேண்டிய கோயில்கள் | Temples We Must Visit During Tough Times

கடன் பிரச்சினை தீர்க்கும் பரிகார தலங்கள்

1. அன்னமலை தண்டாயுதபாணி கோவில், மஞ்சூர், ஊட்டி

2. கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு.

3. சாரபரமேஸ்வரர் கோவில், திருச்சேறை, கும்பகோணம்

4. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.

5. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோவில், திருமலை.

குழந்தைப்பேறு அருளும் பரிகார தலங்கள்

1. ஏகம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்.

2. சங்கரராமேஸ்வரர் கோவில், தூத்துக்குடி.

3. சிவசுப்ரமண்யசுவாமி கோவில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி.

4. தாயுமானசுவாமி கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

5. பாலசுப்ரமணியசுவாமி கோவில், ஆயக்குடி, தென்காசி.

6. மயூரநாதசுவாமி கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.

7. முல்லைவனநாதசுவாமி கோவில், திருக்கருகாவூர்.

8. நச்சாடை தவிர்தருளியசுவாமி கோவில், தேவதானம், ராஜபாளையம்.

9. விஜயராகவபெருமாள் கோவில், திருபுட்குழி.

குடும்பத்தில் ஒற்றுமை அருளும் பரிகார தலங்கள்

1. அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம்.

2. அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருச்செங்கோடு.

3. அங்காளம்மன் கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்.

4. கல்யாணவிகிர்தீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூ டலூர்.

5. சங்கரநாராய ணசுவாமி கோவில், சங்கரன் கோவில்.

6. நவநீதசுவாமி கோவில், சிக்கல்.

7. பள்ளிக்கொண்டீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி.

8. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா கோவில், மஞ்சக்கம்பை.

9. மாரியம்மன்,காளியம்மன் கோவில், ஊட்டி

10. லட்சுமி நரசிம்மர் கோவில், பரிக்கல்.

11. வெக்காளியம்மன் கோவில், உறையூர்

12. தலசயனப் பெருமாள் கோவில், மாமல்லபுரம்.

பிரச்சனைகள் தீர அனைவரும் ஒருமுறையாவது செல்ல வேண்டிய கோயில்கள் | Temples We Must Visit During Tough Times

திருமணத்தடைகள் நீக்கும் பரிகார தலங்கள்

1. உத்வாகநாதசுவாமி கோவில், திருமணஞ்சேரி.

2. கல்யாணபசுபதீஸ்வரர் கோவில், கரூர்.

3. கல்யாணவேங்கடரமணசுவாமி கோவில், தான்தோன்றிமலை.

4. கைலாசநாதர் கோவில், தாரமங்கலம்.

5. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் கோவில், பாரிமுனை.

6. பட்டீஸ்வரர் கோவில், பேரூர். கோவை.

7.நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை.

8. வரதராஜபெருமாள் கோவில், நல்லாத்தூர்.

9. வீழிநாதேஸ்வரர் கோவில், திருவீழிமழலை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.







+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US