தைப்பூசம் 2025:விரதத்தை எப்பொழுது தொடங்க வேண்டும்?
முருகப்பெருமானுக்கு உரிய தைப்பூசம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.அப்படியாக பலரும் தைப்பூசம் திருவிழா வரும் முன்பாக 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வார்கள்.இந்த வருடம் 2025 ஆம் ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது.
தை மாதம் வரும் பௌர்ணமி திதியை தான் தைப்பூசமாக கொண்டாடுவோம்.அப்படியாக தைப்பூசம் 48 விரதம் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் எப்பொழுது இருந்து விரதம் இருக்க வேண்டும்?மேலும்,விரதம் மேற்கொள்பவர்கள் என்ன விஷயம் எல்லாம் செய்யலாம்?என்ன விஷயம் எல்லாம் செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
தைப்பூசம் 48 நாள் விரதம் மேற்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் டிசம்பர் 25ஆம் தேதி நாளை மறுநாள் புதன்கிழமை அன்று விரதம் இருக்க தொடங்கலாம்.அவ்வாறு இருக்கும் பொழுது சரியாக தைப்பூசம் அன்றைய நாளில் 48 நாள் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
சிலரால் 48 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்கமுடியாது அப்படியானவர்கள் 21 நாள் விரதம் இருக்க முடியும் என்றால் வரும் ஜனவரி 22-ம் தேதி விரதத்தை துவங்கினால், தைப்பூசம் முடியும்போது 21 நாட்கள் கணக்கு வரும்.
விரதம் மேற்கொள்ளும் முறை: விரதம் என்பது நாம் இறைவனிடம் வைக்கும் வேண்டுதலை நிறைவேற்ற மட்டும் கடைபிடிக்க கூடிய வேண்டுதல் அல்ல.விரதம் என்பது நம் மனதையும் உடலையும் சுத்தப்படுத்தி இறைவனை அடைய ஒரு வழியாகும்.
அப்படியாக பலரும் விரதம் என்றாலே பயம் கொள்வார்கள்.நாம் அதை சரியான முறையில் பின்பற்ற முடியுமா என்று.ஆனால் விரதம் என்பது அவ்வளவு கடுமையானது அல்ல.நாம் மனதார செய்ய எல்லாம் எளிமையாகும்.
சிலர் விரதம் மேற்கொள்ளும் பொழுது தினமும் தலைக்கு குளிப்பார்கள்.ஆனால் இதை பலராலும் உடல்நலம் காரணமாக பின்பற்ற முடியாது.அப்படியானவர்கள் அவர்கள் உகந்த நாளைக்கு தலைக்கு குளிக்கலாம்.பிற நாட்களில் எப்பொழுதும் போல் உடம்புக்கு குளித்தால் போதும்.
விரதம் மேற்கொள்ளும் பொழுது நம் மனதில் இறைவன் மட்டுமே இருக்கவேண்டும்.வீண் வம்புகள்,போட்டி பொறாமை,தீய சொற்கள் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.பேச்சில் நிதானமும் மனதில் அமைதியும் தேவை.தினமும் குளித்து முடித்துவிட்டு ‘ஓம் சரவணபவ’ என்று சொல்லி திருநீறு பூசி உங்களுடைய அன்றாட வேலையை துவங்குங்கள்.
உங்களுடைய விரதமும் துவங்கிவிடும்.நேரம் கிடைக்கும் பொழுது முருகப்பெருமானை அவன் இருப்பிடம் சென்று தரிசனம் செய்து வாருங்கள்.வீட்டில் நேரம் கிடைக்கும் வேளையில் முருகன் பாடல்கள் ஒலிக்க செய்யுங்கள்.
மனிதன் அவன் மனதை ஒருநிலை படுத்தி அவன் குறிக்கோளில் மட்டும் கண்கள் வைத்தால் அவன் நினைத்ததை அவன் அடைய முடியும்.அதோடு சேர்த்து அவனுக்கு இறையருள் கிடைக்க அவன் வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி அடைவான்.
அதற்கான ஒரு வழிதான் விரதம்.ஆக இந்த தை பூசம் முருகப்பெருமானை மனதில் நினைத்து விரதம் இருங்கள்.அவன் உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |