கர்ம வினைகளை குறைக்கும் தானங்கள்

By Sakthi Raj Oct 09, 2024 07:00 AM GMT
Report

 பிறப்பு என்பது பல ஜென்மத்து தொடர்பு என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.அப்படியாக முந்தய பிறப்பில் ஏதேனும் அறியாமையால் தவறுகள் செய்து இருக்க அது தொடர் ஜென்மத்தில் அனுபவிக்க வாய்ப்புகள் உள்ளது.அதன் பெயர் தான் கர்மவினைகள் என்போம்.

அப்படியாக வாழ்க்கையில் நாம் எதிர்பாராத நேரத்தில் அறியாமையில் இருக்கும் பொழுது நம்மை சில துன்பங்கள் தாக்கும் .அப்பொழுது மனதில் இனம் புரியாத குழப்பங்கள் வாழ்க்கையில் அடுத்த அடுத்த மாற்றங்கள் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.

அதாவது தன்னை அறியாமல் சமயத்தில் சூழ்நிலை கைதியாக நேரம் நம்மை மாற்றி விடுவதை பார்த்துஇருப்போம்.அவை தான் வாழ்க்கையின் மிகவும் இக்கட்டான சூழ்நிலை என்றே சொல்லலாம்.

இவ்வாறு முன் ஜென்மத்து கர்மவினைகளோ இல்லை ஏதேனும் நேரம் சரி இல்லாமை இவைகளில் இருந்து நாம் விட பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

கர்ம வினைகளை குறைக்கும் தானங்கள் | Thanam Palangalum Parigarangalum

ஆன்மீகம் இவை நம்முடைய வாழ்க்கையின் மருத்துவர் என்றே சொல்லலாம்.நம்முடைய துன்பங்களுக்கு கண்டிப்பாக ஆன்மீக ரீதியா நல்ல பரிகாரங்களும் பலன்களும் இருக்கிறது.

அப்படியாக பரிகாரங்களில் சிறந்த பரிகாரமாக பார்க்கப்படுவது பிறருக்கு செய்யும் தானம்.இதை நாம் நம்முடைய தோஷங்கள் பாவங்கள் போக்க செய்வதை காட்டிலும் மிகவும் மனதார இல்லாதவர்களுக்கு ஒருவர் தானம் செய்ய அவருடைய கர்மவினைகள் முற்றிலும் குறைவதை நாம் பார்க்கமுடியும்.

உலகெங்குமுள்ள முருகனைத் துதித்துப் போற்றி போற்றி

உலகெங்குமுள்ள முருகனைத் துதித்துப் போற்றி போற்றி


இந்த தானம் செய்வதால் இல்லாமல் வாடிய மனம் மகிழ்ச்சி அடைகிறது.ஒருவருடைய துன்பத்தை போக்க இறைவன் மகிழ்ச்சி அடைந்து நமக்கு கருணை காட்டுகின்றான்.அப்படியாக தானத்தில் சிறந்த தானமாக சொல்லப்படுவது அன்னதானம்.

பசி ஒரு மனிதனின் அனுபவிக்ககூடாத கொடுமை.அவ்வாறு வறுமையால் பசியால் வாடிய உயிர்களுக்கு அன்னதானம் வழங்க நம்முடைய பிறவி பயனை அடைகின்றோம். அப்படிப்பட்ட அன்னதானத்தை விட சிறந்த தானம் அரிசி தானம் சொல்லப்படுகிறது.

கர்ம வினைகளை குறைக்கும் தானங்கள் | Thanam Palangalum Parigarangalum

அரிசியில் இருந்து தான் அன்னமும் வருகிறது.அத்தகைய இந்த அரிசியை உண்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்கும், மூன்று வேளையும் திருப்தியாக சாப்பிட முடியாதவர்களுக்கும் தேடி சென்று தானம் செய்யலாம். அரிசி தானம் என்பது அனைவராலும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு தானம் தான்.

இந்த ஒரு தானத்திற்கு நம் வாழ்க்கையையே மாற்றக் கூடிய சக்தி உண்டு. ஒரு வருடத்தில் எத்தனை முறை முடியுமோ தங்களுடைய வசதிக்கு ஏற்ப வறுமையால் கஷ்டப்படுவர்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் கர்வமும் இல்லாமல் ஒருவர் தானம் செய்ய அவர் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை சந்திக்கமுடியும்.

மேலும் நம்முடைய வாழ்க்கையில் வீண் செய்யக்கூடாத பொருட்களில் இந்த அரிசி முதல் இடம் வகிக்கிறது.எக்காரணம் கொண்டும் நாம் சாப்பாட்டை வீணாக்குவது தவிர்க்க வேண்டும்.இவ்வாறு செய்ய அன்னபூரணியின் பரிபூர்ண அருள் நமக்கு கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US