திருமண வரம் அருளும் கல்யாண வெங்கடரமண சுவாமி எங்கு இருக்கிறார் தெரியுமா?

By Aishwarya Sep 16, 2025 10:54 AM GMT
Report

 இந்தியாவின் சமய பண்பாடு, பல ஆலயங்களையும் அவற்றின் பின்னணிகளையும் கொண்ட புராண வரலாற்றினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கோயிலும் அதற்கான தனி வரலாற்றினை சுமந்து நிற்கின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தானாகவே தோன்றியவர் என்ற பெயருக்கு ஏற்றார் போலவே மூலவர் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். தென்திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் இந்த கோயில் ஒரு ஆன்மீக தலமாக மட்டுமல்லாமல் ஒரு வரலாற்று புதையலாகவும் திகழ்கிறது.

திருமண வரம் அருளும் கல்யாண வெங்கடரமண சுவாமி எங்கு இருக்கிறார் தெரியுமா? | Thanthondrimalai Temple

தல வரலாறு 1:

தான்தோன்றி’ என்ற சொல் ‘தானாகவே தோன்றியது’ என்பதை குறிக்கிறது. பொதுவாக பெருமாள் கோயில்களில் தெய்வ சிலைகள் மனிதர்களால் வடித்து பிரதிஷ்டை செய்யப்படுகிறது. ஆனால் இந்த கோயிலில் பெருமாள் சுயம்பு மூர்த்தியாக தானாகவே தோன்றியதால் இந்த தலத்திற்கு தான்தோன்றி மலை என்ற பெயர் உருவானது.

புராணக் கதையின்படி பார்க்கும்போது வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே, யார் பெரியவர் என்று போட்டியெழுந்துள்ளது.

ஆதிசேஷன் மேருமலையை தன் ஆயிரம் தலைகளால் இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளான். வாயுவால் மலையை அசைக்கக் கூட முடியவில்லை. அப்போது ஆதிசேஷன் பிசியை சிறிது தளர்த்தியவுடன், வாயு பகவான் கடும் கோபத்துடன் மலையை தாக்கினார்.

இதனால் அந்த மேருமலை உடைந்து சிதறியது. சிதறிய துண்டுகளில் ஒன்று இங்கு விழுந்து தான் தோன்றி மலையாக உருவாகியுள்ளது. அந்த மலையின் மீது பெருமாள் சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது. 

ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் - சிறப்புமிக்க ஆலயமும் அதன் வரலாறும்

ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில் - சிறப்புமிக்க ஆலயமும் அதன் வரலாறும்

 

தல வரலாறு 2:

இந்த பகுதியில் வாழ்ந்து வந்த சோமசர்மா என்ற பக்தனுக்காக திருப்பதி வெங்கடாசலபதி இங்கு வந்து தோன்றியதாக கூறப்படுகிறது. சோம சர்மா என்ற பக்தர் தினந்தோறும் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபாடு செய்வது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் முதுமை காரணமாக அவரால் தொலைவு பயணிக்க முடியாமல் போனது.

இதனால் சோம சர்மாவின் கனவில் வந்த பெருமாள், "சோம சர்மாவே! நீ எங்கிருக்காயோ அங்கேயே நான் வருகிறேன்" என அருளினார். மறுநாள் சோமசர்மாவின் முன்னர் வெங்கடஜலாபதி ச் சுயம்புவாக தோன்றியுள்ளார். சுயம்பாக தோன்றிய சிலைக்கு சோமசர்மா பூஜை செய்து வழிபட்டுள்ளார். காலப்போக்கில் அந்த இடம் தான்தோன்றி பெருமாள் கோயிலாக மாறியதாக வரலாறு கூறுகிறது. 

குழந்தை பாக்கியம் கிடைக்க ஒருமுறை செல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 4 கோவில்கள்

குழந்தை பாக்கியம் கிடைக்க ஒருமுறை செல்ல வேண்டிய சக்தி வாய்ந்த 4 கோவில்கள்

தல அமைப்பு:

தான்தோன்றி மலைக்கோயில் கரூர் நகரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக அரை பர்லாங் தூரம் பரவியுள்ள இந்த குன்றின் மேல் புறம் ஏறுமுகமாகவும் கீழ்ப்புறம் தாழ்ந்தும் காணப்படுகிறது. இது ஒரு குடைவரைக் கோயில் என்பதால் அதன் முக்கிய பகுதி மலையே குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடக்கலை நாமக்கல்லில் உள்ள நரசிம்மர் கோவிலின் குடைவரை கட்டடத்தை ஒத்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

திருமண வரம் அருளும் கல்யாண வெங்கடரமண சுவாமி எங்கு இருக்கிறார் தெரியுமா? | Thanthondrimalai Temple

கருவறை:

கோயிலின் கருவறை மலையின் உள்ளே 13 அடி 6 அங்குலம் நீளம், 14 அடி 6 அங்குலம் உயரம், 9 அடி 9 அங்குலம் அகலம் கொண்டது. மூலவர்: கருவறையின் நடுவில் ஒரு உயர்ந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையின் கீழ் புறம் மூலவரான அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி பாறையிலேயே புடைப்பு சிற்பமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். மூலவரின் சிலை சுமார் 10 அடி உயரத்திற்கு கம்பீரமாக செதுக்கப்பட்டுள்ளது.

மேற்கு நோக்கி சன்னதி:

இக்கோயிலில் ஒரு தனி சிறப்பு பெருமாள் மேற்கு நோக்கி திருமுகம் கொண்டுள்ளதே. பொதுவாக பெருமாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தாயார் சன்னதி: திருப்பதியில் இருப்பது போலவே இங்கும் தாயாருக்கு தனியாக சன்னதி இல்லை. 

கோயிலின் மற்ற பகுதிகள்:

மகா மண்டபம்:

கருவறை முன்பாக உள்ள மகா மண்டபம் மற்றும் பிற சன்னதிகள் பிற்காலத்தில் அதாவது கிபி 12 அல்லது 13-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. துவார பாலகர்கள்: கருவறை நுழைவாயிலில் துவாரபாலகர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

பிற சன்னதிகள்:

கோயில் பிரகாரத்தில் ஆஞ்சநேயர், கருடாழ்வார் போன்ற உபசன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெருமாளுக்கு எதிரே கொடிமரம் மற்றும் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளன.

சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்த இடம் எங்கு இருக்கு தெரியுமா?

சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்த இடம் எங்கு இருக்கு தெரியுமா?

கோபுரம்:

கருவறையின் மேல் மலை மீது ஒரு சிறிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் கிடையாது.  

சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள்: கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்களில் பல்வேறு புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் 16 இசைக் கருவிகளை வாசிக்கும் சிற்பங்கள் குறிப்பிடத்தக்கது.

இந்த கோயிலில் பல இடங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகள் சோழ மன்னரின் காலத்தை சேர்ந்தவை என்றும் இந்த கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய தகவல்களை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

திருமண வரம் அருளும் கல்யாண வெங்கடரமண சுவாமி எங்கு இருக்கிறார் தெரியுமா? | Thanthondrimalai Temple

திருவிழாக்கள்:

தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் அனைத்து விதமான விழாக்களும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக புரட்டாசி மாதம் இங்கு மிகவும் விசேஷமானது. புரட்டாசி மாதத்தில் 22 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர்.

மாசி மாதத்தில் நடக்கும் தேரோட்ட விழாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தான்தோன்றிமலை பெருமாள் கோவில் உள்ள ஒரு விசேஷமான வழிபாடு என்னவென்றால் “சமர்ப்பணம்”. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் கனவில் பெருமாள் வந்து தனக்கு செருப்பு தைக்க கூறுவதாக நம்பப்படுகிறது.

அவர்கள் மிகுந்த பக்தியுடன் பெருமாளின் அடியாளாக, பிரம்மாண்டமான செருப்புகளை தயாரித்து ஊர்வலமாக வந்து காணிக்கையாக செலுத்துவார்கள். இந்த செருப்புகள் கோயிலில் பாதுகாத்து வைக்கப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மீண்டும் புதிய செருப்புகள் காணிக்கையாக வழங்கப்படும். இந்த வழிபாடு பெருமாளின் அறிய நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது.

வேண்டுதல்:

திருமணமாகாதவர்கள் திருமண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டியும் இங்கு வழிபாடு செய்கின்றனர். இக்கோயிலில் வழிபடுபவர்களின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். 

திருமண வரம் அருளும் கல்யாண வெங்கடரமண சுவாமி எங்கு இருக்கிறார் தெரியுமா? | Thanthondrimalai Temple 

கோயிலின் சிறப்புகள்:

தென் திருப்பதி: இக்கோயில் தென்திருப்பதி என அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வெங்கடரமண சுவாமியை தரிசிக்கின்றனர்.

அரிசி அக்னி:

கோயில் விளக்கு எரிந்த பிறகு வரும் தீபம் கருவறையில் இருந்து வெளியே வரும்போது பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனை பக்தர்கள் ஒரு அதிசய நிகழ்வாக கருதுகின்றனர்.

பக்தர்கள் நம்பிக்கை:

இக்கோவிலில் உள்ள தீர்த்தம் புனிதமானதாகவும், நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாகவும் நம்பப்படுகிறது. பக்தர்கள் இந்த தீர்த்தத்தை தங்கள் பிணிகள் நீங்க பிரார்த்தனை செய்கின்றனர். வெங்கடரமண சுவாமி திருக்கோயில் பெரும் ஒரு வழிபாட்டுத்தலமாக மட்டுமல்லாமல் பக்தர்களின் நம்பிக்கையின் அடையாளமாகவும், பழமையான வரலாற்றின் சான்றாகவும் திகழ்கிறது.

இந்த கோயில் பெரும் கட்டிடமாக மட்டுமல்லாமல் தலைமுறை தலைமுறையாக பக்தர்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புவாக தோன்றியிருப்பதால் இயற்கையின் சக்தியும் இறைவனின் அருளும் இங்கு ஒன்று சேர்ந்து உள்ளது.

ஆன்மீகத்தின் வரலாற்றின் ஒரு சேர அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் தான்தோன்றி அறியப் பயண அனுபவத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US