12 ராசிகளின் மிகப்பெரிய கனவு என்ன தெரியுமா?

By Sakthi Raj Jul 21, 2026 08:30 AM GMT
Report

மேஷம்:

இவர்களுக்கு பெரிய வீடு சொந்த தொழில் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

ரிஷபம்:

இவர்களுக்கு பண வசதி அமைதியான குடும்பம் மற்றும் சகல வசதியும் இருக்கக்கூடிய வசதியான வீடு வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

மிதுனம்:

அவர்கள் பணம் புதிய அனுபவங்கள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.

திருப்புகழை பாடும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

திருப்புகழை பாடும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்

கடகம்:

இவர்களுக்கு எப்பொழுதும் அன்பான குடும்பம் குழந்தைகளுடன் நல்ல உறவு நிம்மதியான வீடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

சிம்மம்:

இவர்களுக்கு எப்பொழுதும் புகழ், அதிகாரம் எல்லோரும் அவர்களை மதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

கன்னி:

இவர்கள் எப்பொழுதும் ஒழுக்கமான வாழ்க்கை மற்றும் நல்ல வேலை அமைதியான மனம் அமைய பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

துலாம்:

இவர்களுக்கு நல்ல காதல், செல்வம், அழகான வீடு, மகிழ்ச்சியான தம்பதியராக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

விருச்சிகம்:

இவர்கள் வெற்றி அதிக செல்வம் உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று எப்பொழுதும் ஆசை இருக்கும்.

கர்மாவின் முக்கியமான 9 பதிலடி என்ன தெரியுமா ?

கர்மாவின் முக்கியமான 9 பதிலடி என்ன தெரியுமா ?

தனுசு:

இவர்கள் வெளிநாட்டு வாய்ப்பு மற்றும் சுதந்திரமான வாழ்க்கை ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

மகரம்:

இவர்கள் கடின உழைப்பால் மிகப்பெரிய அளவில் சொத்து சேர்க்கையை பெற வேண்டும். நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.

கும்பம்:

இவர்கள் புதுமையான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும், தொழில்நுட்ப வளர்ச்சியை தெரிந்து கொள்ள வேண்டும், சமுதாயத்தில் தனி மரியாதையை பெற வேண்டும் என்று ஆசை கொள்வார்கள்.

மீனம்:

இவர்கள் ஆன்மீகத்தில் நல்ல நாட்டம், குடும்பத்தில் மகிழ்ச்சி, மனதில் நிம்மதி என்று நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US