நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெற்றிலையின் ரகசியம்
தமிழ் கலாச்சாரத்தில் வெற்றிலை பாக்கு இல்லாத எந்த இரு சுபநிகழ்ச்சியும் கிடையாது.கோயில்பூஜைகளில் தொடங்கி வீட்டில் நடக்கும் விஷேச நிகழ்வுகள் வரை வெற்றிலை மிக அவசியமாகிறது.அப்படியாக வெற்றிலைக்கு பின்னால் சில ரகசியம் ஒளிந்து இருக்கிறது.
அதை பற்றி பார்ப்போம். அதாவது வெற்றிலையின் காம்பை யார் சாப்பிட்டாலும் அவர்களுக்கு ஞானம் வராது , மூதேவி என்னும் தேவியால் வறுமையே உண்டாகும். ஏனெனில் காம்பு பகுதி மூதேவிக்கு உரிய பாகமாகும்.
யாரிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொடுப்பார்கள் அல்லவா. எனவே வெற்றிலை உண்ண வேண்டுமாகின் காம்பை அடியோடு கிள்ளி எறிந்து விட்டு சாப்பிடவேண்டும்.
மேலும் முனை ஒடிந்த வெற்றிலை சாப்பிட்டாலும் பலன் இல்லை , காரணம் வெற்றிலை முனையில் ஸ்ரீதேவி குடிகொண்டிருப்பார், அவரை நீக்கி சாப்பிட்டால் செல்வ வளம் சேராது.
பூஜைக்கு வெற்றிலை வைக்கும் போது முனை ஒடியாத ,அழுகல் சொத்தை இல்லாத ,ஓட்டை இல்லாத வெற்றிலையே வைப்பதுதான் சிறந்தது . வெற்றிலை கிழிந்தோ.
காய்ந்தோ இருந்தால் கூட படையலுக்கு வைக்கக்கூடாது. வெற்றிலையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை வாழ்கிறார்கள்.
எனவே வெற்றிலையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த பாக தேவதை பாதிக்கப்படும், பின்பு அருள் கிடைக்காது, சாபம் தான் கிட்டும், ஆதலால் கவனமாக இருக்கவேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |