இலங்கையின் சிறப்புமிக்க சீதா அம்மன் கோயில் உருவான கதை
இராமயணமானது பழங்கால காவியமாகும். இது இளவரசர் ராமர் மற்றும் அவருடைய மனைவி சீதையை மையப்படுத்தி உருவாகியதாகும்.
இந்த காவியத்தின் கதை கிமு 500 முதல் கிமு 100 வரை நடைபெற்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க காவியத்தை வால்மீகி முனிவர் இயற்றியுள்ளார்.
இராமயணத்தில் உள்ள அனைத்து நிகழ்வுகளும் இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாக நடைபெற்றுள்ளன.
அவ்வாறு இராணவனின் பிடியில் சிக்கிய சீதா இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவர் தங்கியிருந்த இடமே தற்போது கோயிலாக உருவாகியுள்ளது.
இலங்கை சீதா அம்மன் கோவில்
இலங்கையில் இளவரசி சீதாவுக்காக உருவாக்கப்பட்ட ஒரே ஒரு இந்து கோவில் சீதா அம்மன் கோவில் ஆகும்.
இலங்கையின் ராமாயணம் தொடர்பான முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று.
சீதா அம்மன் கோவில் நுவரெலியா கண்டி வீதியில் இயற்கை எழில் சூழ்ந்த நுவரெலியா நகருக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
சீதா எலிய என அழைக்கப்படும் இக்கோயிலானது அசோக வாடிகாவிற்கு அருகில் உள்ளது.
இக்கோயிலின் மண்ணானது கருப்பு நிறத்தில் காணப்படும்.
ராமாயண இதிகாசத்தின் படி அனுமன் இலங்கையில் அருநந்து வெளியேறும் போது இப்பகுதியை எரித்ததாக நம்பப்படுகிறது.
சீதா அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள ஓடைக்கு அருகில் இன்று வரையில் அனுமனின் பாதச்சுவடுகள் காணப்படுகின்றன.
சீதா தேவி இந்த இடத்தில் ராவண மன்னனால் சிறைபிடிக்கப்பட்டார், அசோக் வாடிகாவில் தங்கியிருந்த சீதா தேவியின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு நீரோடை கோயிலுக்குப் பக்கத்தில் மலையிலிருந்து ஓடிக் கொண்டு இருந்தது. இந்த ஓடை தான் தற்போது கோயிலுக்கு பின்னால் காணப்படுகிறது.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த ஓடையில் மூன்று சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த ஓடையின் ஓரத்தில் ராமர், சீதாதேவி, லக்ஷ்மணன் மற்றும் அனுமன் ஆகியோருக்கு கோயில் உள்ளது.
இந்த நதியில் ஹனுமானின் பாதச்சுவடுகளுக்கு நிகரான கால் தடங்கள் காணப்படுகின்றன.
இக்கோயிலானது 365 நாட்களும் திறந்திருக்கும். இரண்டு நேர பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. காலை நேரம் 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை நேரம் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை நிகழும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |