தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பஞ்சதீப விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்
இன்று(28.07.2024)தேய்பிறை அஷ்டமி. சனி பகவானுக்கு குருவாக கருதப்படும் கால பைரவரை.அவரை இந்த தேய் பிறை அஷ்டமியில் வழிப்பாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.
சனி தோஷம், ஏழரை சனி, அஷ்டம சனி, பாத சனி போன்ற துன்பங்களை அனுபவிப்பவர்கள் காலபைரவரை வழிபாடு செய்ய சனி பாதிப்பில் இருந்து காப்பற்றப்படுவார்கள்.
பஞ்சதீப விளக்கு
சிவபெருமானின் அம்சமான காலபைரவர் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால் இவருக்கு கோவிலில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச விளக்குகளை ஏற்ற வேண்டும். அதாவது 5 அகல் விளக்குகளை எடுத்து கொண்டு அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும்.
நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்ச தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும்.
இந்த நாளில் பைரவாஷ்டகம் வாசிப்பது உள்ளத்திலும், எண்ணத்திலும் நல்ல விஷயங்களை விதைக்கும்.பொதுவாக பைரவரை வழிபாடு செய்தால் நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.
பைரவரை வணங்கும் முறை
நவகிரக தோஷங்கள் நீங்க பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும் ஒருவருக்கு சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்றி வழிபடலாம்.
நீண்ட நாள் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடைமாலை சாற்றி அர்ச்சனை செய்யலாம். வீட்டில் செல்வம் செழிக்க அஷ்டமிகளில் பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும்.
மேலும் பைரவருக்கு மிளகு கலந்த அன்னம் மற்றும் வடை நைவேத்தியமாக படைக்கலாம். அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது போல், பைரவருக்கும் வடைமாலை சாற்றி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |