சம்பளம் வாங்கியதும் கரைந்துவிடுகிறதா? இந்த தவறுகள் தான் காரணம்
கையில் வைத்திருக்கும் பணம் முழுவதும் செலவாவதற்கு சில காரணங்கள் உள்ளது.
பண பற்றாக்குறை
சம்பளம் வாங்கிய சில நாட்களிலேயே கையில் வைத்திருந்த பணம் செலவானதாக பலர் புலம்புவதை கேட்டிருப்போம். அவ்வாறு நடப்பதற்கு நாம் வீட்டில் செய்யும் சில தவறுகளும் காரணமாக கூறப்படுகிறது.
கடவுளுக்காக செய்யப்படும் நைவேத்தியத்தில் உப்பு போட்டு சமைக்கக்கூடாது. வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் கீரையை சமைக்கக்கூடாது. உப்பு கொட்டி வைத்திருக்கும் ஜாடியிலிருந்து கைகளால் உப்பை எடுத்து பயன்படுத்தக் கூடாது. வீட்டின் வாசலில் எண்ணெய் சிந்தக்கூடாது.
தவிர்க்கவேண்டியவை..
உப்பு, ஊறுகாய் வீட்டில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கக்கூடாது. வீட்டில் ஓடாத கடிகாரங்கள் இருந்தால், அது சரிசெய்து வைக்க வேண்டும். உறவினர்கள் வீட்டிற்கு வரும்போதும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை, விஷேச நாட்களில் கசப்பான காய்கறியான பாகற்காயை சமைக்கக்கூடாது.
வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்யும் போது வெண்ணெய்யை உருக்கக்கூடாது. ஆன்மீகப்படி, இதையெல்லாம் செய்தால் மகாலட்சுமி வீட்டை விட்டு வெளியேறி விடுவார்.
லக்ஷ்மி கடாட்சத்தைக் குறைக்கும். பணம் கரைந்துவிடும் என்பது நம்பிக்கை. இதனை திருத்திக்கொள்வது செல்வத்தை பெருக்கும் என கூறப்படுகிறது.