ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல், கல்வி, தொழில், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அதன் பிரகாரம் மற்றவர்களை கண்மூடித்தனமான நம்பும் ஏமாளிகளாகவே பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் எனவும் அவர்களின் தனித்துவ குணங்கள் குறித்தும் விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனம்
மீன ராசினர் இரக்க குணம் கொண்டவர்களாகவும், கற்பனை ஆற்றலுக்கு பெயர் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுடன் கவலையுடன் கண்ணீர் சிந்தி யார் எதை சொன்னாலும் உடனே நம்பி அவர்களுக்கு உதவி செ்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதனால் எளிதில் ஏமாற்றப்படும் ராசியாக மீன ராசியினர் அறியப்படுகின்றார்கள்.
இந்த ராசியினரை பெரும்பாலும் மற்றவர்கள் தங்களின் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.
துலாம்

துலாம் ராசியினர் எப்போதும் மகிழ்ச்சியான சூழலை விரும்பும் குணம் கொண்டவர்களாகவும் சண்டைகளளை தவிர்க்க என்ன வேண்டுமானாலும் செய்யும் இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருப்பார்கள்.
இந்த ராசியினர் ஒருவர் மீது பாசம் வைத்துவிட்டால் இவர்கள் சொல்லும் அனைத்தையும் அப்படியே நம்பிவிடுவார்கள்.
தனுசு

தனுசு ராயினர் இயல்பாகவே மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் மனதுக்கு பிடித்தவர்கள் பொய்யே சொன்னாலும் இவர்கள் மீது துளியும் சந்தேகம் கொள்ள மாட்டார்கள்.
இவர்கள் ஒருவரை நம்பிவிட்டார்கள் என்றால் இறுதிவரையில் அந்த நம்பிக்கையை அவர்கள் மீது கொண்டிருப்பார்கள்.