ஆற்றைக் கடந்து வந்து அருள் பாலித்த தெய்யம்.. பக்தி பரவசத்தில் ஆழ்ந்த கேரள மக்கள்

By Sakthi Raj Oct 30, 2026 09:45 AM GMT
Report

கேரளாவில் பாரம்பரிய கலை வழிபாடான தெய்யத் திருவிழாவில் காசர்கோடு மாவட்டத்தில் ஆற்றைக் கடந்து வந்த தெய்யங்களுக்கு பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பாரம்பரிய முறைப்படி மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

கேரளா மாநிலம் வட மலபார் பகுதியில் கண்ணூர் மற்றும் காசர்கோடு மலையாள மாதமான துலாம் பிறந்ததை அடுத்து தெய்யம் திருவிழா பருவம் அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளது.

ஆற்றைக் கடந்து வந்து அருள் பாலித்த தெய்யம்.. பக்தி பரவசத்தில் ஆழ்ந்த கேரள மக்கள் | Theyyam Crosses The River To Bless Devotees

ஒருவர் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் எப்பொழுது நிகழ்கிறது தெரியுமா ?

ஒருவர் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் எப்பொழுது நிகழ்கிறது தெரியுமா ?

இதன் ஒரு பகுதியாக கடந்த புதன்கிழமை அன்று அராயி நதிக்கரையில் புகழ்பெற்ற அராயி ஏரத் முண்டியா தெய்யக்காவ் திருவிழாவின் அரிய சடங்குகள் பக்தி பரவசத்துடன் துவங்கியுள்ளது.

அதனை அடுத்து இந்த திருவிழாவில் முக்கிய சடங்காக கார்த்திகா சாமுண்டி தெய்யம் மற்றும் அதன் காவல் தெய்வங்கள் அராயி ஆற்றில் ஒரு கரையில் இருந்து மறுக்கரைக்கு ஒரு படகின் வழியாக அழைத்து வரப்பட்டது.

பிரம்மாண்டமான தலை கவசங்கள், வண்ணமயமான முகப்பூச்சுக்கள் மற்றும் பாரம்பரிய உடைகளுடன் தெய்வீக வடிவில் தெய்ய கலைஞர்கள் ஆற்று வெள்ளத்தை கடந்து வந்த அந்த நிகழ்வு பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்தியது. ஆற்றைக் கடந்து நிலை பகுதியை அடைந்த தெய்யங்களை கரையில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பக்தி பரவசத்துடன் வரவேற்றனர்.

ஆற்றைக் கடந்து வந்து அருள் பாலித்த தெய்யம்.. பக்தி பரவசத்தில் ஆழ்ந்த கேரள மக்கள் | Theyyam Crosses The River To Bless Devotees

உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் பலவீனமாக உள்ளதா? இந்த பரிகாரங்களை செய்யுங்கள்

உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் பலவீனமாக உள்ளதா? இந்த பரிகாரங்களை செய்யுங்கள்

கேரள மாநிலத்திற்கே உரிய இந்த பாரம்பரிய செண்டை மேளம், தாள வாத்தியங்கள் மற்றும் பந்தம் ஏந்திய தீவட்டிகளுடன் மங்களகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. அந்த மாநிலத்தில் தெய்யங்களை கடவுளாகவே கருதுகின்றனர். அவர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, அவர்கள் ஊர்வலமாக கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

அதோடு, கேரளாவின் காவுகள் என்று அழைக்கப்படும் புனித காடுகளிலும் பாரம்பரிய கோவில்களிலும் இந்த அக்டோபர் மாதம் துவங்கியுள்ள தெய்யம் திருவிழாக்கள் அடுத்த ஆண்டு மே மாதம் வரையிலும் தொடர்ச்சியாக நடைபெற இருக்கிறது. உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர் வெளிநாடு போன்ற இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர தொடங்கி இருக்கின்றனர். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US