தினம் ஒரு திருவாசகம்
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உன்னை கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக்கு அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழந்தருளாயே!
விளக்கம்
சிவஞானத்தில் திளைத்து இன்புற வேண்டும் என்பதை உலக உயிர்கள் விரும்பின என இப்பாடல் உணர்த்துகிறது. குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அரசனே, நீ நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் உள்ளிட்ட பஞ்சபூதங்களிலும் நிலைத்திருப்பதாக ஞானியர்கள் கூறுகின்றனர்.
நீ பிறப்பு, இறப்புக்களைக் கடந்து நிலையாவன் என்று இசைப்பாடல்களால் பாடுகின்றனர், ஆடகின்றனர். ஆனால் உன்னை நேரே கண்டு அறிந்தவர்களை நாங்கள் காதால் கேட்டு அறிந்திலோம்.
நீ உன்னுடைய அடியர்களுக்கு எளியவனாகவும், ஏனையோருக்கு அரியவனாகவும் நிற்கின்றாய். எங்கள் குற்றங்களை எல்லாம் நீக்க எங்கள் முன்னே வந்து திருக்காட்சி தந்து அருள்கின்ற எம்பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.
நிலைத்த இன்பமாகிய சிவஞானத்தில் திளைக்க இறைவனின் அடியவராதலே வழி என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |