தினம் ஒரு திருவாசகம்
திருவெம்பாவை பாடல் – 15
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர்ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
திருவாசகம் என்னும் தேனில் ஒவ்வொரு பாடலும் அத்தனை இனிமையானது.அத்தனை அழகான பாடலில் இதுவும் ஒன்று.அதில் எம்பெருமான் மீது பித்தாக இருக்கும் ஒரு பக்தையின் வாழ்க்கையை ஒரு பாடலில் சொல்லிவிட முடியாது.
ஆனால் இந்த பாடலில் அவ்வளவு அழகாய் சொல்லிருக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்த பாடலின் விளக்கம் பற்றி பார்ப்போம்.
விளக்கம்
சில நேரங்களில் மனம் மகிழ்ந்து அத்தனை சந்தோஷமாக எம்பெருமானே என்று வாயார ஓயாது இறைவனின் புகழை பேசி கொண்டே இருப்பாள். அதே மனம் மகிழ்ச்சியில் வாயடைந்து எம்பெருமான் மீது வைத்த அன்பினால் கண்ணீர் ததும்ப மனதின் உள்ளே புகழ் பாடி கொண்டு இருப்பாள்.
பிறகு மனம் ஓய்ந்து எம்பெருமானின் புகழையும் பெருமையும் மனதார அழுது முடித்த பிறகு தரையில் வீழ்ந்து செய்வதறியாது இறைவனின் திருநாமத்தை சொல்லி கிடப்பாள்.
எம்பெருமானிடம் பித்தாக இருப்பாள்.இப்படி அவளை மாற்றியது யார்?அப்பன் ஈசன்.அந்த ஈசனை வாயார துதித்து பாடி மலர்கள் நிறைந்த பொய்கையில் குதித்து நீராடுவோம்.பின் அனைவருமாக சேர்ந்து இறைவனை பற்றி படுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |