தினம் ஒரு திருவாசகம்

By Sakthi Raj Jun 14, 2024 05:00 AM GMT
Report

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி சீ
ரார் பெருந்துறைநந் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

தினம் ஒரு திருவாசகம் | Thinam Oru Thiruvsagam03 Thevaram Siva Peruman

விளக்கம்

தினம் ஒரு திருவாசகம்

தினம் ஒரு திருவாசகம்


ஈசன் என்றதனால் தன் வயத்தனாதலும், எந்தை என்றதனால் பேரருளுடையனாதலும், தேசன் என்றதனால் தூய உடம்பினனாதலும், சிவன் என்றதனால் இயற்கை உணர்வினனாதலும், நிமலன் என்றதனால் இயல்பாகவே பாசங்களின் நீங்கினவனாதலும், பிறப்பறுக்கும் மன்னன் என்றதனால் முடிவிலா ஆற்றலுடையனாதலும், தேவன் என்றதனால் முற்றுணர்புடையனாதலும் ஆராத இன்பம் அருளுமலை என்றதனால் வரம்பில் இன்பமுடையனாதலுமாகிய இறைவனது எட்டுக் குணங்களையும் காட்டினார். “எண் குணத்தான்தாள்” என்ற நாயனார் அருள் மொழிக்குப் பரிமேலழகர் உரையில் கூறப்பட்டுள்ள எண்குணங்களைக் காண்க.

+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US