கும்ப ராசியில் பிறந்தவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
ஜோதிடத்தில் சனி பகவானின் ஆதிக்கத்தை கொண்ட கும்பராசிகர்கள் ஒரு தனித்துவமாகவே காணப்படுவார்கள். இவர்களுக்கு விரும்பிய நபரை திருமணம் செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும். மேலும், காதலில் இவர்களுக்கு அதிக ஈடுபாடும் இருக்கும்.
ஆனால், அதை வெளிப்படுத்த சில தயக்கத்தையும் காட்டி இருப்பார்கள். இவர்களுக்கு கிரக அமைப்புகளின் படி புதன் பகவான் இரண்டாம் இடத்தில் நீசம் அடைவதால் காதல் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாமல் சில பஞ்சாயத்து போன்ற விஷயங்களை சந்திக்க நேரலாம்.
குடும்பத்திலும் சில பிரச்சனைகள் வரலாம். அதேபோல், கும்ப ராசியில் பிறந்த பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு 25 முதல் 26 வயது வயதிற்கு மேலும், ஆண்கள் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது 29 வயதிற்கு மேலும் திருமணம் செய்வது வாழ்க்கையில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
இவர்களுக்கு எப்பொழுதுமே திருமணம் காலகட்டங்களில் போராட்டம் இருந்தாலும் பிறகு ஒரு நல்ல முன்னேற்றமும் செழிப்பு உண்டாகும். இவர்கள் காதல் மற்றும் திருமண தடைகள் விலகுவதற்கு மதுரையில் இருக்கக்கூடிய மீனாட்சி அம்மனை வழிபாடு செய்வது சிறந்தது என்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ஈஸ்வரி அவர்கள்.
மேலும், கும்பராசி அவருடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை பற்றிய இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம்.