நீங்கள் பிறந்த தேதி இதுவா? 2026-ல் ராஜயோகம் பெற இதை செய்யுங்கள்
2026 ஆம் ஆண்டு புத்தாண்டு இன்னும் சிறிது நாளில் பிறக்கஇருக்கும் நேரத்தில் எல்லோரும் அவர்களுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எல்லோரும் அந்த ஆண்ட நிச்சியம் அவர்களுக்கு ஒரு சிறப்பை தரும் என்ற ஒரு நம்பிக்கையில் அந்த ஆண்டில் கால் எடுத்து வைப்பதுண்டு.
அந்த வகையில் புத்தாண்டு முதல் நாள் நாம் ஒரு சில விஷயங்களை செய்தால் நிச்சயம் அந்த ஆண்டு முழுவதும் நமக்கு ஒரு மிகச்சிறந்த நல்ல பலன்களை கொடுக்கும். அப்படியாக, எண் கணிதம் வாயிலாக புத்தாண்டு முதல் நாள் ஒவ்வொருவரும் என்ன செய்தால் அவர்களுக்கு யோகம் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

எண் 1, 10, 19, 28:
இந்த தேதியில் பிறந்தவர்கள் லட்சுமி நாராயண ஆலயம் சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.
எண் 2, 11, 20, 29:
இந்த தேதியில் பிறந்தவர்கள் கிருஷ்ண பகவான் மற்றும் ராதை ஆகியவர்களை வழிபாடு செய்தால் அவர்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக அந்த ஆண்டு அமையும்.
எண் 3, 12, 21, 30:
இந்தத் தேதியில் பிறந்தவர்கள் குரு பகவானை வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுக்கு ஒரு நல்ல மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்.
எண் 4, 13, 22, 31:
இந்த தேதியில் பிறந்தவர்கள் கங்காதேவியை வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.
எண் 5, 14, 23:
இந்த தேதியில் பிறந்தவர்கள் ஸ்ரீ ராமபிரானையும் விஷ்ணு பகவானையும் வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்கள் வாழ்க்கை தேடுதலுக்கான நல்ல பதில் கிடைக்கும்.
எண் 6, 15, 24:
இந்த தேதியில் பிறந்தவர்கள் பூமாதேவியை வழிபாடு செய்தால் நிறைய அதிர்ஷ்ட வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும்.
எண் 7, 16, 25:
இந்த தேதியில் பிறந்தவர்கள் சிவபெருமானை வழிபாடு செய்தால் நிச்சயம் நல்ல தொடக்கமாக அமையும். இவர்கள் நேர்மறையான எண்ணங்களோடு அந்த ஆண்டை தொடங்குவார்கள் .
எண் 8, 17, 26:
இந்த தேதியில் பிறந்தவர்கள் துர்கா தேவியை வழிபாடு செய்தால் மிகுந்த தைரியத்தோடு அந்த ஆண்டை அவர்கள் தொடங்குவதோடு எதையும் வலிமையோடு போராடி வெல்வார்கள்.
எண் 9, 18, 27:
இந்த தேதியில் பிறந்தவர்கள் அனுமனை வழிபாடு செய்தால் நிச்சயம் அவருடைய துணையால் எதையும் தைரியத்தோடு சாதிக்கக்கூடிய தன்மை இவர்களுக்கு கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |