2026 புது வருடம் அதிர்ஷ்டமாக மாற இந்த ஒரு விஷயம் செய்ய மறக்காதீர்கள்
புத்தாண்டு என்றாலே எல்லோருக்கும் ஒரு வகையான சந்தோஷம் தான். அதாவது காலம் மாறினால் வாழ்க்கை மாறும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நபரும் புத்தாண்டை எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அந்த வகையில் புது வருடம் முன்னிட்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் புதிய மனிதனாக மாற வேண்டும்?
அதோடு வீடுகளில் ஏற்படக்கூடிய பொருளாதாரத்தில் கஷ்டம் விலகி உங்களின் உழைப்பின் வழியாகவும், இறை அருளாலும் நீங்கள் ஒரு மிகப்பெரிய உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
வாழ்க்கை மாற வேண்டும் என்றால் நிச்சயம் நம்முடைய மனநிலையில் ஒரு பெரிய மாற்றத்தை நாம் கொண்டு வர வேண்டும். அதாவது எந்த ஒரு காரியங்களை செய்வதாக இருந்தாலும் அதனை முழு நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.

இதைவிட முக்கியமாக நம்முடைய மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும். சிந்தனை தான் நம்முடைய எதிர்காலமாக மாறுகிறது. என்னதான் ஜோதிட ரீதியாக கிரகங்கள் நமக்கு பாதகமான நிலையில் இருந்தாலும் நம்முடைய எண்ணம் மிக வலிமையாகவும் நேர்மறையாகவும் இருந்தால் அந்த எண்ணமே கெட்ட நேரத்துடன் போராடி நமக்கு ஒரு வெற்றியை பெற்றுக் கொடுக்கும்.
மேலும் நம்மில் நிறைய நபர்கள் ஒரு சில வாக்கியங்களை சொல்லி கேள்வி பட்டு இருப்போம். அதாவது நான் எது நடக்கக்கூடாது என்று வருந்தினேனோ அந்த விஷயம் இன்று என் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் சொல்வார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்களுடைய கிரகங்கள் ஒரு பகுதியாக இருந்தாலும் மறுபகுதி அவர்களுடைய எதிர்மறை நிகழ்வுகள் நடந்ததிற்கான பாதி காரணமாக மாறுகிறது.
அதாவது அதிகப்படியான யோசனைகளால் அவர்கள் மனதில் அவர்களை அறியாமல் நிறைய எதிர்மறை சிந்தனைகளை வைத்திருப்பார்கள். இதைவிட முக்கியமாக அந்த நபர் மிகவும் வலிமையான நபராக இருப்பதால் மட்டுமே அந்த எதிர்மறை சிந்தனைகள் கூட அவர்களுக்கு மிகச் சரியாக அவர் நினைத்தது போல் நடந்து விடுகிறது.
ஆக, எதிர்மறை என்ற ஒரு விஷயமே நாம் நினைத்தது போல் நடக்கின்ற அளவிற்கு நம்மிடம் வலிமை இருக்கிறது என்றால் எதற்காக நம்முடைய சிந்தனையை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தி அதை நாம் வாழ்க்கையில் செயல்படுத்தி வாழக்கூடாது? இந்த ஒரு மாற்றமே நிச்சயம் ஒரு மிகப்பெரிய மாறுதலாக வாழ்க்கையில் அமையும்.

இதைவிட மிக முக்கியமாக நம்முடைய கடந்த கால கர்ம வினைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நிகழ்காலத்தில் இன்றைய நாள் பொழுது வரை நீங்கள் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்தவர்களாக கூட இருங்கள்.
ஆனால் இந்த நொடி பொழுதில் செய்த தவறுகளை நினைத்து வருந்தி ஒரு நல்ல மனிதனாக மாற முயற்சி செய்யுங்கள் கிரகங்கள் உங்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்புகளை கொடுத்து விடுகிறது என்று நாம் பார்ப்போம்? விதி என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை என்றாலும் நமக்கு அந்தந்த காலகட்டங்களில் நடக்கக்கூடிய பாதிப்புகளை குறைக்கக்கூடிய தன்மை நம்மிடமே இருக்கிறது.
அது கிரகங்களிடம் இல்லை. நாம் எந்த அளவிற்கு நல்ல மனிதராக மாறுகின்றோமோ அந்த அளவிற்கு நம்முடைய கர்மவினை ஆனது குறைந்து கொண்டே வரும். அதனால் மாற்றங்களை முதலில் நம்முடைய உடலிலும் ஆன்மாவிலும் நிகழ்த்துவோம், பிறகு நம்மை சுற்றிலும் படிப்படியாக ஒவ்வொரு மாற்றங்களும் நிகழத் தொடங்கும்.
இந்த மாற்றம் என்பது ஒவ்வொரு ஆன்மாவை பொறுத்து சில கால அவகாசம் எடுக்கும். அதோடு, வாழ்க்கையில் ஒன்றை அடைய வேண்டும் என்றால் நிச்சயம் பொறுமை வேண்டும்.
அந்த பொறுமையை நீங்கள் கையில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களுடைய கடமையை தவறாது செய்து ஒரு மிகச்சிறந்த மனிதனாக மாற வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்ற பொழுது நீங்கள் எதிர்பார்க்கின்ற விஷயங்கள் எல்லாம் நீங்கள் கேட்காமலே உங்கள் அருகில் வந்து இருக்கும்.

அதனால், செல்வத்தை தேடியும், உயர் அந்தஸ்துகளை நாடியும் செல்வதை கடந்து இன்று நல்ல மனிதனாக வாழ்வதற்கு மனதில் இறை சிந்தனையை விதைப்போம். இறை வழிபாட்டினால் ஒரு மனிதனுடைய மனமானது தூய்மையாகும். ஒரு மனிதன் ஒரு மனிதனாக மாறுகிறான். இறைவழிபாட்டால் அவனுக்குள் நிறைய அற்புதங்கள் நிகழ்கிறது.
ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்கின்றான். வெற்றி அவன் தேடாமலே அவன் வசம் வருகிறது. ஆதலால் 2026 ஆம் ஆண்டு எதற்கும் அஞ்சாமல் நம்முடைய கடமையான வேலையை செய்து நல்ல மனிதனாகவும் பிறரை துன்புறுத்தாமலும் மனதில் எந்த ஒரு தீய எண்ணங்களும் இல்லாமல் எதற்கும் ஆசை கொள்ளாமல் எதற்கும் வருந்தாமல் இன்றைய நாள் என்னுடைய பொழுது இன்று எனக்காக ஒரு வாய்ப்பு இருக்கிறது.
அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்வேன் என்று சந்தோஷமாக அந்த நாளில் கிடைக்கின்ற வாய்ப்புகளை நீங்கள் எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ, எவ்வளவு தூரம் பயன்படுத்துங்கள் அதுவே உங்களுக்கான வெற்றி.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |