யாத்திரை செல்பவர்கள் கட்டாயம் செய்யவேண்டிய வழிபாடு
நாம் இருந்த இடத்தில் இருந்துக்கொண்டு கடவுளை தொழுவது என்பது வேறு. அதே ஆலயம் சென்று இறைவழிபாடு செய்வது என்பது வேறு. காரணம், ஆலயம் செல்ல நம்முடைய கர்மவினைகள் குறைந்து தோஷம் விலகும்.
மேலும், எல்லா நாட்களும் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறந்தது என்றாலும், செவ்வாய், வெள்ளி, பௌர்ணமி, பிரதோஷம் கார்த்திகை நாட்களில் கோயிலுக்கு செல்வது கூடுதல் நன்மை வழங்கும். அன்றைய நாள் இறை சக்தி அதிகம் காணப்படும்.
ஆக, அன்றைய நாள் ஆலயம் சென்று வழிபாடு செய்வது நம்முடைய ஆன்மாவை மேன்மை அடைய செய்யும். அதே போல், நாம் வசிக்கும் இடத்தின் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு மிக எளிதாக சென்று விடலாம்.
ஆனால், வேறு ஊர்களில் அல்லது மாநிலத்தில் இருக்கும் ஆலயத்திற்கு நாம் நினைத்த நேரம் செல்ல இயலாது. அவர்கள் வருடம் ஒரு முறை அல்லது, 6 மாதம் ஒருமுறை புனித யாத்திரை மேற்கொள்வார்கள். அவ்வாறு செல்வது நாம் நினைத்த பார்த்திடாத அளவு நன்மைகள் வழங்குகிறது.
அதாவது, ஆண்டுக்கு ஒருமுறையாவது நாயன்மார்கள் பாடி தொழுத தேவார திருத்தலங்கள், ஆழ்வார்கள் பாடி வழிபாடு செய்த திவ்ய தேசங்கள் சென்று இறை தரிசனம் காண்பது நம்மை பல சிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது.
அப்படியாக, புனித யாத்திரை வழிபாட்டில், நாம் என்ன பிராத்தனை செய்தாலும் முக்கியமான பிராத்தனை ஒன்றை வைக்க வேண்டும் என்கிறார்கள். அது தான் "புனர்தரிசனம்" கிடைக்க வேண்டும் என்று வேண்டுவது. "புனர்" என்பதற்கு மீண்டும் என பொருள்.
அதாவது, உன்னை மீண்டும் வழிபடும் பாக்கியத்தை அருள வேண்டும் என்பதே ஆகும். இது எவ்வளவு முக்கியமான ஒன்று. நிலையற்ற வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் அல்ல.
ஆக, எனக்கு உன்னை மீண்டும் தரிசிக்க வாய்ப்பு கொடுப்பதே மிக சிறந்த பாக்கியம் புண்ணியம் செய்த பலன் என்று கருதி வேண்டுவது ஆகும். இதை நாம் புனித யாத்திரை அல்லாமல், எந்த கோயிலுக்கு சென்றாலும் வேண்டுதல் செய்யலாம்.
இவ்வாறு செய்யும் பொழுது மனம் புனிதம் ஆகும். அழுக்குகள் எல்லாம் விலகி இறை அருளால் நன்மை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |