மாற்றவே முடியாத பிறப்பில் வந்த ஐந்து விஷயங்கள்

By Sakthi Raj Sep 02, 2024 02:00 PM GMT
Report

நாம் பிறக்கும் பொழுதே சில விஷயங்களை நமக்கு இவை தான் நடக்கவேண்டும் என்று எழுதி வைத்திருக்கும்.அதாவது ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் சேர்ந்து இந்த ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.

(1) ஆயுள்

இது தான் நாம்.நாம் வாழும் காலம்.எத்தனை பெரிய செல்வந்தராக இருந்தாலும் மனிதனுடைய ஆயுள். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது.

(2) வித்தம்

 செல்வம் வளம்.அதாவது நாம் பிறக்கும் பொழுது ஒருவருக்கு இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எவ்வளவு முயற்சி செய்தாலும் சிறிய காசு கூட சேமிக்க முடியாது. தங்காது. என்பது தான் இதன் அர்த்தம்.

(3) வித்யா

ஒருவருக்கு உயர்வை தருவது கல்வி.அதாவது ஒரு நபருக்கு இவ்வளவு கல்வி பயில முடியும்,எவ்வளவு பணம் செலவு செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது என்பதை குறிக்கிறது.

மாற்றவே முடியாத பிறப்பில் வந்த ஐந்து விஷயங்கள் | Things We Cannot Change In Life

(4) கர்மா

நம்முடைய முன் ஜென்மம் பாவ புண்ணியங்கள்.அதாவது ஒருவரது தொழில், குணம், மனைவி மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன தொழில் செய்து தான் இந்த ஜீவன் ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது. வாழ்க்கையில் நாமே காண்கிறோம்.

பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ராகு கேது தோஷம் பாதிப்பா?அப்போ முதலில் கட்டாயம் இதை செய்யுங்கள்

ராகு கேது தோஷம் பாதிப்பா?அப்போ முதலில் கட்டாயம் இதை செய்யுங்கள்


(5) மரணம்

இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில் இந்த ஜீவனுக்கு ப்ராண வியோகம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை யாரும் மாற்றமுடியாது. யாராலும் மாற்றமுடியாது. ஒரு நோயாளியை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு மருத்துவர் அரை மணி நேரம் முன்பு வந்திருந்தால் பிழைத்திருப்பார் என்கிறார்.

அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும் மருத்துவர் இதே கேள்வியை தான் கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான் பிழைப்பார்.

ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்தில் இருக்கும் போதே பூர்வ வினைக்கு ஏற்ப நிர்ணயிக்கப படுகிறது இதை மற்றயாராலும் மாற்ற முடியாது.ஆக நாம் எதற்கும் வருந்தாமல் இவ்வளவு தான் என்று நம்முடைய முயற்சிகள் போடா அதற்கேற்ற பலனை நாம் பெற முடியும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US