இனி கோயிலுக்கு சென்றால் இதை செய்ய மறக்காதீர்கள்
ஒரு மனிதனுக்கு எப்பேர்ப்பட்ட துன்பங்கள் வந்தாலும் கோயிலுக்கு சென்று வர வந்த துன்பங்கள் படிப்படியாக குறையும். அப்படியாக, கோயிலில் நம்முடைய கவலைகள் தீர கோயிலில் சில பரிகாரம் செய்வதுண்டு.
அதாவது, விளக்கு ஏற்றுவது, சுவாமிக்கு மாலை சாற்றுவது, அபிஷேகம் செய்வது, புதிய வஸ்த்திரம் வாங்கி சாத்துவது, தேங்காய் உடைப்பது போன்ற விஷயங்கள் செய்வோம். இதனால் நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
அந்த வகையில் கோயிலில் நாம் செய்யவேண்டிய ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் இருக்கிறது. இதனால் நமக்கு பெரிய பலன்கள் பெறலாம் என்று நம்பப்படுகிறது. அது தான் கோயிலை சுற்றி வலம் வருதல். அவ்வாறு செய்தால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்த காரியம் சாதிக்கலாம்.
அந்த வகையில் நாம் கோயிலை எத்தனை முறை சுற்றி வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஒரு முறை கோவில் பிரகாரத்தை வலம் வந்தால் இறைவனை அணுகுதல் என்று அர்த்தம்.
மூன்று முறை வலம் வந்தால் மனச்சுமை குறையும்.
ஐந்து முறை வலம் வந்தால் நினைத்தது கிடைக்கும்.
ஏழு முறை வலம் வந்தால் காரிய வெற்றி உண்டாகும்.
ஒன்பது முறை வலம் வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும்.
பதினொரு முறை வலம் வந்தால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
பதிமூன்று முறை வலம் வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
பதினைந்து முறை வலம் வந்தால் தன லாபம் உண்டாகும்.
பதினேழு முறை வலம் வந்தால் தானியம் சேரும்.
பத்தொன்பது முறை வலம் வருவதால் பிணிகள் நீங்கும்.
இருப்பத்தொரு முறை வலம் வருவதால் கல்வி விருத்தியாகும்.
இருபத்தி மூன்று முறை வலம் வந்தால் சுக வாழ்வு கிட்டும்.
நூற்றியெட்டு முறை வலம் வந்தால் புத்திர பேறு கிடைக்கும்.
இருநூற்றுயெட்டு முறைவலம் வந்தால் யாகம் செய்த பலன் உண்டாகும்.
ஆக, இனிமேல் கோயிலுக்கு சென்றால் முடிந்த அளவிற்கு 3 முறையாவது வலம் வந்து வழிபாடு செய்ய நமக்கு நாம் நினைத்த பலனை அடையலாம். அதோடு நேர்மறை எண்ணங்கள் கிடைக்கும், நம்மை சூழ்ந்த தீய சக்திகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |