வீட்டில் கெட்ட நேரம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்
ஆன்மீக ரீதியாக நம்முடைய வீட்டில் நாம் மிகவும் கவனமாக கையாள வேண்டிய பொருட்கள் என்று சில விஷயங்களை சொல்கின்றனர். அதாவது அவை நம்முடைய குடும்ப சூழலோடு மிகவும் நெருங்கிய தொடர்புடைய பொருட்களாக கருதப்படுகிறது.
அதை நாம் மிகவும் சரியான முறையில் கையாள்வோம் என்றாலும், சமயங்களில் அந்த பொருட்கள் கை தவறி கீழே விழும் வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு கைதவறி கீழே விழும் பொழுது நமக்கு சில அறிகுறிகள் உணர்த்துகிறது. அதை பற்றி பார்ப்போம்.
குங்குமம்
வீட்டில குங்குமம் என்பது கடவுள் போன்றது. காலம் காலமாக வீட்டில் குங்குமம் சிதறினால் வீட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள்.
நாம் கை தவறி குங்குமம் கொட்டினால் சில அறிகுறிகளை நமக்கு காண்பித்து கொடுக்கிறது என்று அர்த்தம். அதாவது நாம் நிதானமாக இல்லை கவனமாக வாழ்க்கையில் படி எடுத்து வைக்க வேண்டும் என்ற ஒரு அறிகுறியாகும். ஆதலால், குங்குமம் சிதறினால் நாம் பயம், பதட்டம் அடையாமல் வரும் நிகழ்வுகளை கவனமாக கையாள வேண்டும் என்று முன் எச்சரிக்கையாக எடுத்து கொள்ளவேண்டும்.
தண்ணீர்
வீட்டில் கை தவறி விழும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று தண்ணீர. பொதுவாக தண்ணீர் சிந்தினால் கடன் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதைக் குறிக்கிறது. நம் வீடுகளில் தண்ணீர் சிந்துவதை தவிர்க்க வேண்டும்.
இதற்கு இன்னொரு காரணம். தண்ணீரை சேமித்து வைக்கவேண்டும் என்ற ஒரு காரணமும் இருந்தாலும் இப்படியான அறிகுறிகள் உங்கள் வீட்டில் தோன்றினால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைத்து சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். கடன்களை வாங்கும் முன் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும். தேவையற்ற கடன்களை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவது ஆகும்.
உப்பு
நம்முடைய சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் பொருட்களில் உப்பும் ஒன்று. வீட்டில் தவறுதலாக கூட உப்பை சிந்துவது அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். உப்பை சிந்தினால் வீட்டில் சண்டை, சச்சரவுகள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உண்டு. ஒருவேளை தெரியாமல் உப்பை சிந்திவிட்டால் அன்றைய நாளில் நீங்கள் மௌனத்துடன் இருப்பது மிகவும் நல்லது.
அரிசி
வீட்டில் அரிசி கொட்டுவதும் நல்ல சகுனம் அல்ல என்பார்கள். கை தவறி அரசி கொட்டுதல் என்பது தெய்வ தவறுகளை குறிக்கிறது. நீங்கள் வேண்டிக் கொண்ட ஏதாவது ஒரு வேண்டுதல்களை நிறைவேற்றாமல் விட்டிருக்கலாம். அதனை நினைவுப்படுத்தவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
மேலும், தெய்வ குறைகள் ஏற்படாமல் இருக்க அரிசியை அளக்கும் பொழுது எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |