காசிக்கு போறீங்களா அப்போ கண்டிப்பாக இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

By Sakthi Raj Aug 31, 2024 05:30 PM GMT
Report

இந்துக்கள் பொறுத்த வரையில் காசி சென்று விட்டால் நம்முடைய பாவங்கள் கரைந்து புண்ணியம் சேர்ந்து விடும் என்ற ஒரு நம்பிக்கை இருக்கும்.

அப்படியாக பலரும் காசிக்கு போக வேண்டும் என்று பெரும் கனவோடு ஆசையோடும் இருப்பார்கள்.சிவன் பொறுத்த வரையில் "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"என்பதற்கு ஏற்ப சிவனின் அருள் இருந்தால் மட்டுமே அவனை தரிசித்து நாம் அவனின் ஆசியை பெற முடியும்.

அதிலும் காசி செல்லவேண்டும் என்றால் நிச்சயமாக அவன் அழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம். இப்பொழுது காசிக்கு போனால் நாம் கொண்டு சென்ற எதையாவது விட்டு வர வேண்டும் என்று சொல்லுவார்கள் அதை பற்றி பார்ப்போம்.

காசிக்கு போறீங்களா அப்போ கண்டிப்பாக இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் | Things We Should Be Carefull While Going Kasi

ஆன்மீகத்தின் நோக்கமே எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழவேண்டும் என்பதே.அவ்வாறு வாழும் பொழுது நம்முடைய ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்துவிடும். பூமியில் பிறந்த எல்லா உயிரும் பற்று அற்ற நிலைக்குச்செல்ல வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

அக்காலத்தில் குடும்பப் பொறுப்பினை நடத்தி முடித்தவர்கள் காசிக்குச் செல்வது வழக்கம். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக பற்றோ அல்லது விருப்பமோ இருக்கக்கூடாது, எதன் மீதும் எந்த ஒரு ஆசையும் இன்றி இறைவன் ஒருவனையே மனதில் சதா தியானித்து இருக்க வேண்டும் என்பதற்காக உண்டான பழக்கம் இது.

பிறர் கொடுத்த சாபத்திலிருந்து எப்படி வெளிவருவது?

பிறர் கொடுத்த சாபத்திலிருந்து எப்படி வெளிவருவது?


பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து பேரன், பேத்தி எடுத்து மகிழ்ந்து தன் இல்வாழ்க்கைக் கடமையைச் செய்து முடித்தவர்கள் காசி, ராமேஸ்வரம் என தீர்த்த யாத்திரை மேற்கொள்வர்.

மோட்ச கதியை வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்வோர் இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் புண்ணிய நதியாம் கங்கையில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து ஆராதனை செய்வர்.

காசிக்கு போறீங்களா அப்போ கண்டிப்பாக இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் | Things We Should Be Carefull While Going Kasi

அப்படியாக அவர்கள் கங்கையில் ஸ்நானம் செய்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது நம்பிக்கை. கங்கையில் ஸ்நானம் செய்து புதுமனிதனாக வெளிவரும்போது எதன் மீதும் அதிகப் பற்று இருக்கக்கூடாது என்பதற்காக மிகவும் பிரியமான வஸ்துக்களை இனிமேல் உபயோகிப்பதில்லை என விட்டுவிடுவர்.

ஆனால் உண்மையில் இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் இறைவன் அவன் அனுப்பிய உயிர் அதை எப்பொழுதும் வேண்டுமானாலும் அவன் எடுத்து கொள்வான்.அதற்காக நாம் மனம் வருந்தவோ துன்புறுவோ கூடாது என்பதே ஆகும்.

இந்த மாதிரியான ஒரு நிலைக்கு வருவது கடினம் அதனால் தான் காசிக்கு சென்றால் தங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை விட்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US