தினமும் வீட்டில் பூஜை செய்யும் பொழுது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
வீடுகளில் பூஜை அறை என்பது மிகவும் விஷேசமான ஒன்றாகும். நம்முடைய வீடுகளில் சரியான முறையில் இறைவழிபாடு செய்வதால், நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் ஏற்பட்டு இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகும். அப்படியாக, நம் வீடுகளில் பூஜை செய்யும் பொழுது மறந்தும் செய்ய கூடாத விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1. நாம் ஒரு பொழுதும் விபூதியை நீரில் குழைத்து பூசக்கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசவேண்டும்.
2. நம் பூஜை அறையில் இடம் பெறவேண்டிய முக்கியமான பொருட்களில் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி இல்லாமல் வீடுகளில் கட்டாயம் பூஜை செய்யக்கூடாது.
3. பூஜை அறை எப்பொழுதும் நல்ல வெளிச்சமாக இருக்கவேண்டும்.
4. நாம் பூஜை அறையில் வைக்கும் படங்கள் வடக்கு பார்த்து வைக்கக்கூடாது. அவ்வாறு வைக்கும் பொழுது சாபம் உண்டாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
5. நம் வீடுகளில் முக்கிய தினங்களில் விரதம் இருக்கும் பொழுது, தாம்பூலம் தரித்தல், பகலில் உறங்குதல் வீடுகளில் சண்டையிடுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது. அதே போல் வாழைப்பழத்தில் பத்தியை சொருகி வைக்கக்கூடாது.
6. தேங்காய் படைத்து பூஜை செய்யும் பொழுது தேங்காய் இரண்டு துண்டுகளுக்கு மேலாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்யக்கூடாது.
7. பூஜை அறையில் சிலர் கோமதி சக்கரம் வைத்து வழிபட வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறு வைக்க விரும்புபவர்கள் 11 எண்ணிக்கையில் வைத்து வழிபாடு செய்யவேண்டும்.
8. சுவாமிக்கு பூஜை செய்யும் பொழுது எப்பொழுதும் முழு மலரை கொண்டு அர்ச்சனை செய்யவேண்டும். பூவின் இதழ்களை கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் தவறாகும்.
9. நாம் பூஜையின் பொழுது சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்யும் பொழுது அந்த மாலை காய்ந்து போகும் அளவிற்கு விடக்கூடாது. அவ்வாறு காய்ந்து போக செய்வது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை உண்டு செய்யும்.
10. வீடுகளில் சுப்ரபாதம் ஒலிக்க செய்வது என்பது நல்ல பலனை கொடுக்கும். அதே போல் சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். மாலை வேளையில் கேட்பது தவறான விஷயம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |