ஏழரை சனி நடக்கும் பொழுது இதை செய்தால் கட்டாயம் ஆபத்தாம்- என்ன தெரியுமா?
ஜோதிடத்தில் சனிபகவான் நீதிமானாக இருக்கிறார். மேலும் கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களில் சனி பகவான் ஒருவர். சனி பகவான் உடைய காலமான ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, சனி திசை போன்ற காலங்கள் ஒருவருக்கு நடக்கிறது என்றால் அந்த நபர் மிகுந்த அச்சத்தை கொள்வார்கள். காரணம் இந்த காலகட்டங்களில் அவர் மிகப்பெரிய துன்பத்தை மட்டுமே அனுபவிப்பார் என்ற ஒரு தவறான எண்ணத்தினால் மட்டுமே.
அதனால் இந்த காலகட்டங்களில் அவர்கள் பல விஷயங்களை செய்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். அப்படியாக ஒருவருக்கு ஏழரை சனி மற்றும் சனி திசை காலங்களில் அவர்கள் சுபகாரியங்கள் செய்யலாமா? கூடாதா என்பதை பற்றி பார்ப்போம்.
ஏழரை சனி என்பது சனி கிரகம் உங்களுடைய ஜென்ம ராசியில் 12வது வீட்டில் நுழையும் பொழுது தொடங்கக்கூடிய காலமாகும். இது பொதுவாக ஏழரை ஆண்டுகள் நடக்கும். பலரும் இந்த காலகட்டங்களில் திருமணம் மற்றும் வீடு கட்டுதல் புதிய வேலை அல்லது தொழில் தொடங்குதல் கூடாது என்று நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்த காலகட்டங்களில் நாம் கட்டாயமாக சுபகாரியங்கள் செய்யலாம். அதில் எந்த ஒரு தயக்கமும் வேண்டாம். ஆனால் செய்யும் காரியங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது இந்த காலகட்டங்களில் நம்முடைய எண்ணமும் செயலும் மிக மிக தூய்மையாக இருக்க வேண்டும்.
யாரையும் குறைத்து பேசுதல் அல்லது குடும்பத்தை மதிக்காமல் ஒரு காரியத்தை செய்தல், பெரியவர்களுடைய பேச்சை மதிக்காமல் தனியாக ஒரு விஷயத்தை கையாளுதல் போன்றவற்ற இந்த காலகட்டங்களில் தவிர்த்து அனைவருடைய ஆலோசனையும் ஆசிர்வாதத்தையும் பெற்று நாம் செயல்பாடுகளில் ஈடுபடும் பொழுது நல்ல பலன்களை பெறலாம். காரணம் சனி பகவான் என்றாலே கர்ம காரகன். அவர் நம்முடைய தவறுகளுக்கு பாடம் கற்பிக்கக் கூடியவர்.
அதனால் இந்த காலகட்டங்களில் மீண்டும் மீண்டும் தவறுகளை செய்து கொண்டிருந்தோம் என்றால் அவர் அதற்கு தகுந்த மாதிரியான பாடங்களை இன்னும் கடினமாக ஆக்கிக் கொண்டே போவார். அதோடு ஒருவர் தொழில் தொடங்குகிறார் என்றால் அவர்களுக்கு இந்த காலகட்டங்களில் அதிகப்படியான உழைப்புகளை போடக்கூடிய நிலைமை இருக்கும்.

அதோடு ஜென்ம சனி நடந்து கொண்டிருந்தவர்களுக்கு மன அழுத்தங்கள் நிறைய சந்திக்க நேரும். ஆனால் இவர்களுக்கு யோக தசா புத்திகளாக இருந்தால் தீய பலன்கள் கட்டாயமாக குறையும். அதோடு உடைபட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ரிஷபா மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு தாக்கம் சற்று குறைவாகத்தான் இருக்கும்.
இதையெல்லாம் தவிர்த்து ஒருவருக்கு என்ன தசா புத்திகள் நடந்தாலும் குறிப்பிட்ட காலங்களில் ஒருவருக்கு ஒரு விஷயத்தை கொடுத்து இந்த பிரபஞ்சம் ஒரு பாடத்தை கற்பித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் அதை யாராலும் எவராலும் தடுக்க இயலாது.
ஆக எந்த தசா புத்திகள் நடந்தாலும் நம்முடைய மனமும் சொல்லும் செயலும் தூய்மையாக அமைந்துவிட்டால் எல்லா காலமும் பொற்காலம் அவர்கள் வாழ்க்கையில் புயலே அடித்தாலும் புயலுக்கு பின் கட்டாயமாக அமைதியையும் அதிர்ஷ்டத்தையும் அவர்கள் பெற்றுவிடுவார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |