2026 வைகாசி விசாகம்: இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது

By Sakthi Raj May 20, 2026 09:03 AM GMT
Report

முருகப்பெருமானின் அவதார திருநாளாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதாவது தமிழ் கடவுளாக போற்றி வழிபாடு செய்யும் முருகப்பெருமான் சிவபெருமான் நெற்றிக்கண்ணீரிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகளில் இருந்து அவதரித்தது வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் பௌர்ணமி திதியில் இணைந்த நாளில் என்று சொல்லப்படுகிறது.

இந்த நாளில் தெய்வீக சக்தியும் சந்திரன் ஆற்றலும் அதிகரிப்பதாலும் சந்திர விசாக நட்சத்திரத்தில் இருப்பதால் உயர்ந்த ஆன்மீக அதிர்வுகள் உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படியாக, வைகாசி விசாக நாளில் நம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

பொதுவாகவே, விசாக நட்சத்திரம் என்பது வெற்றி, வளர்ச்சி, ஆன்மீக விழிப்புணர்வு கர்ம வினைகளில் இருந்து விடுதலை பெறுதல் ஆகியவற்றை அருளக்கூடிய அற்புதமான நாளாக உள்ளது. இந்த நாளில் நாம் முருகப்பெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்தால் நமக்கு ஜாதகத்தில் செவ்வாய் பலம் அதிகரிக்கும்.

2026 வைகாசி விசாகம்: இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது | Things We Should Do And Donts On Vaikasi Visagam

தொடங்கும் கேது பார்வை.. கோடீஸ்வர யோகத்தை பெரும் 3 ராசிகள் யார்?

தொடங்கும் கேது பார்வை.. கோடீஸ்வர யோகத்தை பெரும் 3 ராசிகள் யார்?

அதனால் மனதில் தைரியமும் எதையும் துணிச்சலாக சமாளித்து போராடக்கூடிய வலிமையையும் கிடைக்கும். அதோடு குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படுகின்ற சண்டைகள் விலகும்.

ஒருவர் இந்த வைகாசி விசாக நட்சத்திரம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் அவர்கள் வாழ்க்கையில் தடைபட்ட காரியங்கள் விலகும், எதிரிகள் வந்த வழி தெரியாமல் சென்று விடுவார்கள், நீண்ட நாள் குடும்பப் பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்தால் அந்த மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம், மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த வாய்ப்புகளும் வேலையில் உயர்ந்த பதவிகளும் திருமணமும் கைக்குடி வரும்.

வைகாசி விசாகம் அன்று செய்ய வேண்டியவை:

வைகாசி விசாகம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விரதத்தை துவங்க வேண்டும். முக்கியமாக அந்த நாளில் முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

முருகப்பெருமானுக்கு உரிய "ஓம் சரவணபவ" என்கின்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யலாம் அல்லது எழுதி வழிபாடு செய்யலாம். பிறகு வீட்டில் இருக்கக்கூடிய முருகப்பெருமானுடைய விக்ரஹம் அல்லது வேலுக்கு பால், பன்னீர், சந்தனம் போன்ற குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

2026 வைகாசி விசாகம்: இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது | Things We Should Do And Donts On Vaikasi Visagam

27 நட்சத்திரத்திற்கு உரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் மலர் என்ன தெரியுமா ?

27 நட்சத்திரத்திற்கு உரிய அதிர்ஷ்ட நிறம் மற்றும் மலர் என்ன தெரியுமா ?

வீட்டில் அபிஷேகம் செய்ய முடியாதவர்கள் முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு நடக்கக்கூடிய அபிஷேகத்தை கண் குளிர காணலாம். அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை வாங்கி கொடுக்கலாம். பிறகு சிவப்பு அல்லது மஞ்சள்நிற ஆடை அணிந்து விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்குதல் குழந்தைகளுக்கு சிறப்பு பொருட்களை தானம் செய்தால் போன்றவை நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும். கட்டாயமாக கந்த சஷ்டி கவசம் அல்லது சுப்ரமணிய சுவாமி கவசம் பாராயணம் செய்வது நம்முடைய குடும்பத்தில் ஏற்படுகின்ற தோஷத்தை போக்கும்.

வைகாசி விசாக நாளில் தவிர்க்க வேண்டியவை:

வைகாசி விசாக நாளில் முருகன் முருகப்பெருமானை மட்டுமே மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். கோபம், குடும்ப பிரச்சினைகள், அசைவ உணவு மற்றும் மதுபானம் சாப்பிடுவது பொய் பேசுவது பிறரை குறை சொல்லி அவமதிப்பது எதிர்மறை சிந்தனைகளோடு இருப்பதை தவிர்த்து அன்றைய நாள் முழுவதும் நேர்மறையான சிந்தனையோடு முருகப்பெருமானை வழிபாடு செய்தால் விரைவில் நல்ல மாற்றம் காணலாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US