மனித வாழ்க்கையில் உள்ள 3 கர்ம வினைகள் என்ன தெரியுமா?
இந்த உலகத்தில் மனிதர்கள் துவங்கி விலங்குகள் மற்றும் பறவைகள் பூச்சிகள் என்று எல்லோருடைய பிறப்பும் கர்ம வினையுடன் தொடர்புடையது என்று நாம் நம்புகின்றோம். அப்படியாக, ஒருவருடைய கர்ம பலன்களை பொறுத்துதான் அவர்களுக்கு வாழ்க்கையில் நன்மை தீமை வருகிறது.
அந்த வகைகளில் வாழக்கூடிய வாழ்க்கையில் மொத்தம் மூன்றுகர்ம வினைகள் உள்ளது. அதாவது சஞ்சித கர்மம் (சேமிப்பு வினை), பிராரப்த கர்மம், ஆகாமிய / கிருயமாண கர்மம். இந்த மூன்று கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நம் வாழ்க்கை சுழற்சியை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.
இதில் முதல் சஞ்சித கர்ம வினை என்பது நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் கணக்குகளை அடக்கி வைத்திருக்க கூடியதாகும். பிராரப்த கர்மம் என்பது சஞ்சித கர்மவினையில் ஒரு பகுதி.
அதாவது இந்த பிறவியில் நாம் அனுபவிக்க கூடிய பலன்கள் ஆகும். ஆகாமிய / கிருயமாண கர்மம் இந்த பிறவியில் நம்முடைய எண்ணங்களாலும் செயல்களாலும் சேர்க்கக்கூடிய கர்ம வினைகளாகும்.
அப்படியாக, இதில் இரண்டாவதாக இருக்கக்கூடிய கர்ம வினைகளை நாம் கட்டாயமாக அனுபவித்தாக வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் இறை வழிபாடு செய்யும் பொழுது அந்த கர்ம விலைகளின் பலன்கள் குறைகிறது என்று சொல்கிறார்கள்.
மேலும், இந்த கர்ம வினை குறைய என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பல்வேறு முக்கிய தகவல்களை இந்த காணொளியில் பார்ப்போம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |