நாளைய ராசி பலன் (20-05-2026)

Report

மேஷம்:

இன்று நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். உடன்பிறந்தவர்களுக்காக சில முக்கிய உதவிகளை செய்ய நேரலாம். குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

ரிஷபம்:

இன்று நட்பு வட்டாரம் விரிவடையும். வேலைப்பளு அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் சில தாமத்தை சந்திக்கலாம். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் லாபம் கொடுக்கும்.

மிதுனம்:

இன்று உங்கள் கடந்த கால தவறுகளை நினைத்து வருந்துவீர்கள். குடும்பத்தில் கைகளை மீறி சில பெரிய பிரச்சினைகளை சந்திக்கலாம். கோபத்தை தவிர்ப்பது அவசியம்.

கடகம்:

இன்று வெளியே செல்லும் பொழுது பேச்சுக்களில் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

சிம்மம்:

உடன் பிறந்தவர்களாள் சந்தித்த பிரச்சனைகள் விலகும். தொழிலில் கூட்டாளிகளுடன் தேவையில்லாத வாக்குவாதம் வைத்துக் கொள்ளாதீர்கள். கடன் பிரச்சனை முடிவிற்கு வரும்.

இந்த மந்திரங்களை நீங்கள் தவறாக உச்சரித்தாலும் முழுமையான பலனை கொடுக்குமாம்

இந்த மந்திரங்களை நீங்கள் தவறாக உச்சரித்தாலும் முழுமையான பலனை கொடுக்குமாம்

கன்னி:

சொந்தங்கள் மத்தியில் சந்தித்த அவமானங்கள் விலகும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். மனதிற்கு பிடித்த செயல்களை செய்து மகிழ்வீர்கள்.

துலாம்:

இன்று உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். எதிர்பார்த்த பொருளாதாரமும் கைகளுக்கு வந்து சேரும். நினைத்த இடத்தில் வேலை கிடைக்கும்.

விருச்சிகம்:

தேவையில்லாமல் மூன்றாம் நபரிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களை பற்றி பகிர்ந்து கொள்ளாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை துணையிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.

தனுசு:

பிள்ளைகளுடன் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு தொலைதூர பயணம் செல்ல நேரலாம்.

2026: குரு பகவானால் உச்சத்திற்கு செல்லப்போகும் அந்த 3 ராசிகள் யார் ?

2026: குரு பகவானால் உச்சத்திற்கு செல்லப்போகும் அந்த 3 ராசிகள் யார் ?

மகரம்:

யார் உங்களை புரிந்து கொண்டார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வீர்கள். அவசரமாக எந்த வேலையும் செய்யாதீர்கள். புதிய நட்புகளின் அறிமுகம் கிடைக்கும்.

கும்பம்:

தொழில் சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டாகும். தொழிலை விரிவாக்கம் செய்வது பற்றி யோசனை செய்வீர்கள். வழக்கு விவகாரங்களில் இருந்து வந்த கசப்புகள் விலகும்.

மீனம் :

ஒன்றுக்கும் மேற்பட்ட யோசனைக்கு பிறகு ஒரு விஷயத்தை செய்வது நன்மை அளிக்கும். புதிய வண்டி வாகனம் வாங்குவது பற்றி யோசனை செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவியுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்யுங்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US