ஆடி மாதத்தில் நாம் கட்டாயமாக செய்யவேண்டியவை
ஆடி மாதம் என்றாலே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புக்கள் உண்டு.அப்படி இருக்க ஆடி மாதத்தில் நாம் கட்டாயமாக செய்யவேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.
பொதுவாக ஆடிஅமா வாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கி யத்துவம் பெறுகின்றன. அவை புனித நீராடல் ,தானம் ,தர்ப்பணம் இந்த மூன்றையும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் இருக்கிறது. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.
அந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள்.
ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்று படுத்தியதன் மூலம் பல நூற்றாண்டு களாக தீர்த்தங்களின் புனிதம் இருக்கிறது, தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல.
அதில் ஆயிரம் விஷயங்கள் நிறைந்து இருக்கிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும்.
எனவே நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம்.
இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |