காணும் பொங்கல் அன்று கட்டாயம் இதை செய்யக்கூடாதாம்
பொங்கல் பண்டிகையின் இறுதி நாளாக கொண்டாட கூடிய காணும் பொங்கல் இன்று உலகெங்கிலும் இருக்கக்கூடிய தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அப்படியாக, இந்த காணும் பண்டிகை எவ்வாறு கொண்டாட வேண்டும்? என்பதைப் பற்றி சரியான புரிதலும், அதனுடைய வழிமுறையும் பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை.
பலரும், காணும் பொங்கல் அன்று இவர்கள் குடும்பத்துடன் சுற்றுலா பயணம் அல்லது உறவினர்கள் வீட்டிற்கு சென்று வருவதை தான் நாம் பார்க்க முடிகிறது. ஆனால் முந்தைய காலங்களில் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் காணும் பொங்கல் அன்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து பல வகையான உணவுகளை செய்து ஆற்றங்கரை போன்ற நீர் நிலைகளுக்கு சென்று விடுவார்கள்.

அதாவது விவசாயம் செழிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடிய நதிகளுக்கு மண் மகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் ஆற்றங்கரையில் மணலில் சுவாமி உருவம் செய்து அதற்கு முன் பலவிதமான உணவுகள், பழங்கள் ஆகிவற்றை படைத்து குங்குமம், மஞ்சள், வெற்றிலை வைத்து மரியாதை செலுத்தி விளக்கேற்றி வழிபாடு செய்வார்கள்.
பிறகு நதிகளுக்கு படைத்த உணவுகளை எல்லோரிடமும் சேர்ந்து பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் உண்மையில் காணும் பொங்கலை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்றால் குருமார்களை சந்தித்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை இந்த தினத்தில் நாம் பெற வேண்டும்.
நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக நம்மளுடைய வாழ்க்கையில் நாம் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று நம் மீது நல்ல உள்ளம் கொண்டவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து அவர்களிடம் நாம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
வீடுகளில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை சென்று அன்றைய தினம் சந்தித்து அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களுடன் மனமகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்து அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவது தான் இந்த நாளின் சிறப்புகள் ஆகும்.
அதேபோல் காணும் பொங்கல் அன்று நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு கட்டாயம் செய்ய வேண்டும். அவர்களை மன மகிழ்ச்சி அடைய செய்யக் கூடிய பொருட்களை நாம் வாங்கி இந்த நாளில் தானம் செய்தோம் என்றால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |