இந்த 13 விஷயங்களை செய்தால் வீடுகளில் செல்வம் குறைந்து விடுமாம்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் ஆன்மீக ரீதியாக சில நல்ல விஷயங்களை நமக்கு விட்டு சென்றிருக்கிறார்கள். அதை நாம் பின்பற்றி வாழும் பொழுது நமக்கு நல்ல பலன் கிடைப்பதாக சொல்கிறார்கள். அப்படியாக இந்து மத சாஸ்திரப்படி நாம் குறிப்பிட்டு சில விஷயங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் என்கிறர்கள். அவை என்னவென்று பார்ப்போம்.
1.ஒருவர் எப்பொழுதும் இடது கையால் ஆசனம் போட்டு அமரக்கூடாது. அவ்வாறு அமரும் பொழுது அவர்களுடைய ஆயுள் குறைந்து விடுமாம்.
2. தலையில் எண்ணெய் தேய்க்கும் பொழுது இடது கையால் தேய்த்தால் புத்திர நாசம் உண்டாகுமாம்.
3. ஒருவருக்கு சாப்பாடு பரிமாறும் பொழுது இடது கைகளால் சாப்பாட்டை பரிமாறக்கூடாது. அவை செல்வம வளத்தை குறைத்து விடுமாம்.
4. ஜோதிடர்கள் குருமார்கள் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் மருத்துவர்கள் சந்நியாசிகள் இவர்கள் யாரேனும் ஆபத்து காலங்களில் இருந்தால் அவர்களுக்கு கட்டாயம் உதவ வேண்டுமாம்.
5. உடன் பிறந்தவர்கள் தாழ்ந்த நிலையில் இருக்கும் பொழுது அவர்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும்.
6. கன்று குட்டி கட்டி இருக்கும் கயிறை தாண்டக்கூடாது.
7. சாப்பிடும் வேலையை தவிர்த்து பிற நேரங்களில் இடது கைகளால் நாம் தண்ணீர் அருந்தக்கூடாது.
8. வீடுகளில் வெற்றிலை போடும் பழக்கம் இருந்தால் மனைவிதான் கணவனுக்கு வெற்றிலை மடித்து கொடுக்க வேண்டுமே தவிர கணவன் மனைவி மகன் தாய் மற்றும் தந்தைக்கு மடித்து தரக் கூடாது.
9. ஜோதிடர்கள் குரு மற்றும் சகோதரியை பார்க்க செல்லும் பொழுது வெறுங்கையுடன் நாம் செல்லக்கூடாது.
10. வீடுகளில் தலை வாசலுக்கு நேரே கட்டில் போட்டோ அல்லது தரையிலோ படுக்க கூடாது.
11. வானவில்லை நாம் பிறருக்கு காண்பிக்க கூடாது.
12. இரவுகளில் தூங்கும் முன் ஈர கால்களுடன் உறங்கக்கூடாது.
13. வீடுகளில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை உற்றுப் பார்க்கக் கூடாது. அதேபோல் தூங்கிக் கொண்டு இருப்பவர்களை அவசரமான வேலையை தவிர அவர்களை எழுப்பக் கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







