வீட்டில் தொடர்ந்து சண்டையா?பூஜை அறையில் இந்த ஒரு விஷயத்தை மாற்றி பாருங்கள்
ஒரு மனிதனின் குணமும் மனமும் அவனின் வீட்டின் சூழலை பொறுத்து தான் உருவாகுகிறது.அப்படியாக வீட்டில் திடீர் என்று எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து விட்டால் பல கஷ்டங்கள் சந்திக்கக்கூடும்.இன்னும் சிலருக்கு வீட்டின் சூழ்நிலை அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுக்கும்.
ஆனால் வெளியே சென்றால் அவர்கள் நிதானமாக எண்ணுவார்கள்.இதற்கெல்லாம் காரணம் நம் வீட்டில் நமக்கே தெரியாமல் சில தவறுகள் செய்வதால் தான்.அந்த தவறுகள் என்ன?அதை எப்படி சரிசெய்வது என்று பார்ப்போம்.
1.நம்முடைய வீட்டில் உள்ள பூஜை அறையை நாம் எப்பொழுதும் சுத்தமாக வைக்கவேண்டும்.தேவை இல்லாத குப்பைகளை அகற்றி விடவேண்டும்.பழைய மாலைகள் உதிர்ந்து போகும் நிலைமையில் இருந்தால் உடனே அதை அகற்றி விடவேண்டும்.
வாரம் ஒருமுறை கட்டாயம் பூஜை பொருட்களை கழுவி சுத்தமாக வைக்கவேண்டும்.அதே போல் கழுவிய பொருட்களுக்கு உடனே சந்தானம்,குங்குமம் வைத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவேண்டும்.பூஜை அறையில் நாம் விளக்கு ஏற்றாமல் இருக்கக்கூடாது.இவ்வாறான விஷயங்களை கடைபிடிக்கவில்லை என்றாலும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் உருவாகி கஷ்டங்கள் உண்டாக்கும்.
2.வீட்டை தண்ணீர் வைத்து துடைக்க வேண்டும் என்றால் சூரியன் மறையும் முன் அதை செய்து விடவேண்டும்.வீட்டை ஆறு மணிக்கு மேல் சுத்தம் செய்வது துரதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
3.அதே போல் நாம் சாப்பிட்ட பாத்திரங்களை உடனே சுத்தம் செய்துவிட வேண்டும்.நீண்ட நேரமாக அதை கழுவாமல் விடக்கூடாது.அவ்வாறு நீண்ட நேரம் கழுவாமல் இருக்கும் பொழுது வீட்டில் நிதி கஷ்டங்கள் உருவாகும்.
4.தினம் உடுத்தும் உடைகளை முடிந்த அளவு எவ்வளவு சீக்கிரம் துவைக்க முடியுமோ துவைத்து விடவேண்டும்.நீண்ட நாட்களாக துணியை துவைக்காமல் ஓர் இடத்தில் போட்டு வைப்பது வீட்டிற்கு நல்லது அல்ல.அதே போல் சுத்தம் செய்த துணியை உடனே மடித்து இருக்கவேண்டிய இடங்களில் வைக்கவேண்டும்.சிலர் வீடுகளில் எவவ்ளவு நாள் ஆனலும் துவைத்த துணியை மடிக்காமல் போட்டு வைத்திருப்பார்கள்.அவை வீட்டில் அமைதியின்மை உருவாக்கும்.
5.வீட்டில் ஒட்டடைகளை பார்த்த உடனேயே அதை சுத்தம் செய்துவிட வேண்டியது அவசியமாகும்.ஒட்டடைகள் சேர்ந்தால் வீட்டிற்கு நல்லது அல்ல.அவை வீட்டில் ஏற்படும் ஆபத்துகளை குறிக்கிறது.அதே போல நம்முடைய வீட்டின் வளர்ச்சியை தடுக்கிறது.
பொதுவாக,நாம் இருக்கும் இடம் சுத்தமாக இருக்கவேண்டும்.அப்பொழுது தான் நம்முடைய மனநிலை ஒருநிலைப்படும்.இல்லையென்றால் மனதில் சில ஒருவித எரிச்சல் எப்பொழுதும் நிலவும்.இதனால் பல வேலைகளில் நம்மால் சரியாக முடிக்கமுடியாமல் போகிறது.
இதற்கு முக்கிய காரணம் நம்முடைய வீட்டில் நம் கடைபிடிக்கும் சில வழிமுறைகள்.ஆக,முடிந்த வரை நம் சோம்பேறி பாராமல் வீட்டை சுத்தம் செய்வது நம்முடைய வளர்ச்சியை பெருக்கி நம்முடைய வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |