மறந்தும் இந்த பொருட்களை கோயிலுக்கு எடுத்து செல்லக்கூடாது
எப்பொழுது வேண்டுமானலும் வாழ்க்கை மாறும் என்ற சுழலில் நமக்கு இருக்கும் ஒரே துணை கடவுள்.இறைவன் தான் இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கும் ஒரே சக்தி.
அப்படியாக அவரை தரிசிக்க நாம் கோயில்களுக்கு செல்வதுண்டு.என்னதான் நாம் சாதாரணமாக கோயிலுக்கு சென்றாலும் சில விஷயங்கள் பொருட்களை கோயிலுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
அது என்ன பொருள் என்று பார்ப்போம். அதாவது நாம் கோயிலுக்கு செல்லும் பொழுது நாம் அணிந்து செல்லும் அடையில் தொடங்கி பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டி உள்ளது.
அதாவது நாம் எந்த கோயிலுக்கு செல்கின்றமோ அந்த சுவாமிக்கு பிடித்த நிற ஆடையை அணிந்து செல்வது நன்மையை தரும்.
மேலும் பெண்கள் கோயிலுக்கு செல்லும் பொழுது தலையை பின்னி பூ வைத்து செல்வது அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை கொடுக்கும்.
அடுத்தபடியாக நமக்கு பிடித்தமான நிறம் எதுவாக இருப்பினும் கோயிலுக்கு செல்லும் பொழுது நாம் கருப்பு நிற ஆடையை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது.
மேலும் நம் அனைவருடைய வாழ்க்கை மாற வேண்டும் நல்ல காலம் பிறக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கோயிலில் நடக்கும் கும்பாபிஷேகம் வேளையில் கும்பாபிஷேகத்தில் தெளிக்க கூடிய தீர்த்தத்தை வாங்க வேண்டும்.
இப்படி வாங்குவதன் மூலமோ அல்லது அவர்களின் மீது தெளிப்பதன் மூலமோ அவர்களுக்கு இருக்க கூடிய கஷ்ட காலம் என்பது நீங்கி நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
எல்லாம் சாதாரண விஷயம் தான் இவை கடைபிடித்தாலே நன்மை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |