கோயிலுக்குச் செல்லும் பொழுது நாம் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான 10 விஷயங்கள்

By Sakthi Raj Jul 29, 2024 10:00 AM GMT
Report

1.கோயில் செல்லும் பொழுது எப்பொழுதும் கிணற்றில் (அல்லது) குளத்தில், அங்கு உள்ள தண்ணீரில் குளித்து (அல்லது) கை கால்களை கழுவிட்டு கோவிலுக்கு செல்லவும்

2.சுவாமி வழிபாடு செய்யும் பொழுது கண்டிப்பாக வெறும் கைகளுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.

3. கோயில் கோபுரத்தை ஆண்கள் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும்.

4.தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.

5.கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

தீராத கஷ்டத்தை தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகை(29-07-2024)

தீராத கஷ்டத்தை தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகை(29-07-2024)


6. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் வணங்கினாலே போதும்.

7. சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.

8.இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

9.நடந்துகொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது.

10.நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ கெடுக்கக் கூடாது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US