நவராத்திரி பண்டிகை பின்னால் இத்தனை விஷயங்கள் உள்ளதா?
நவராத்திரி என்பது அம்பிகையை போற்றி வழிபாடு செய்யக்கூடிய ஒன்றாகும். நவராத்திரி காலங்களில் முடிந்தவரை அம்பிகையை மனதார வழிபாடு செய்தால் நினைத்த காரியங்களை சாதிக்க கூடிய வல்லமையை அம்பிகையின் அருளால் நாம் பெறுகின்றோம். அந்த வகையில் நவராத்திரி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
சோழர் காலங்களில் நவராத்திரி ஒரு அரசு விழாவாகவே கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் நவராத்திரி விழா நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாட கூடிய ஒன்பது நாள் திருவிழாவாக இருக்கிறது.
மேலும், நவராத்திரி காலங்களில் மக்களிடம் வரியை வசூலிக்கக்கூடிய நடைமுறையை விஜயநகர மன்னர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் அவர்களுக்கு சகல செல்வங்களும் வந்து சேர்கிறது.

நவராத்திரி முதன் முதலில் கொண்டாடியது ராமர் தான் என்கிறது புராணங்கள்.
மேலும், நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நேரமாகும்.
ஈசனும் அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை நவராத்திரி ஒன்பது நாட்களும் பார்த்தால் மிகப்பெரிய நற்பலன்கள் வந்து சேர்கிறது. நவராத்திரி ஒன்பது நாட்கள் செய்யக்கூடிய அந்த பூஜையை திருமகளே ஏற்றுக் கொள்கிறாள் என்பது ஐதீகம்.
நவராத்திரி பூஜையின் பொழுது எருமை மாடுகளை பலி கொடுக்கக் கூடிய வழக்கம் மேற்கு வங்கத்தில் இருந்தது. தற்போது அந்த பழக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி விரதம் இருப்பவர்கள் தரையில் தான் தூங்க வேண்டும்.

வடநாட்டில் ஒரு பிரிவினர் நவராத்திரி ஒன்பது நாட்களுமே உணவு சாப்பிடாமல் விரதம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நவராத்திரி கொலு வைக்கப்படுவது போலவே ஜப்பானிலும் பொம்மை கொலு வைக்கிறார்கள். நம் நாட்டின் சரஸ்வதி தேவியை போல் அங்கு பெண் டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதையும் சரஸ்வதி தேவதை போல கையில் புத்தகம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அக்பர் காலத்தில் தசரா திருவிழா கோலாகல நிலைக்கு மாறி இருக்கிறது. நவராத்திரி காலங்களில் கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மணமகிழ்ந்து வீட்டிற்கு வருகிறாள் என்பது ஐதீகம்.
நவராத்திரி காலங்களில் பெண்களுக்கு அன்னதானம் மற்றும் புடவை தாம்பூலம் கொடுத்தால் உடனடியாக திருமணம் கைகூடும். பெண்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் யாவும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |