2026 ஹோலி பண்டிகை முன் வீடுகளில் இந்த பொருட்கள் இருந்தால் அகற்றி விடுங்கள்
இந்து மதத்தில் நம் கொண்டாட கூடிய பண்டிகை ஒவ்வொன்றுக்கு பின்னாலும் ஒவ்வொரு காரண காரியம் இருக்கிறது. அந்த வகையில் ஹோலி பண்டிகை என்பது வண்ணங்கள் நிறைந்த பண்டிகை மட்டுமல்லாமல் அந்த ஹோலி பண்டிகைக்கு பின்னால் நிறைய புராணங்கள் இருக்கிறது.
அதாவது ஒரு மனிதனுடைய புது தொடக்கத்தை இந்த ஹோலி பண்டிகை நமக்கு உணர்த்துகிறது. மேலும் ஹோலி பண்டிகை மாலை நேரத்தில் "ஹோலிகா தகனம்" கொண்டாட கூடிய அந்த நிகழ்வு நமக்கு தீயவை நம்மிடம் இருந்து விலகி நன்மை வந்து சேரும் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறது.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகை மார்ச் 3ஆம் தேதி அன்று வருகிறது. அன்றைய தினம் நாம் வீடுகளில் அதிர்ஷ்டம்சேரவும், எதிர்மறை ஆற்றல் நீங்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

1. ஹோலி பண்டிகை முன்பாக நம் வீடுகளில் காய்ந்து இருக்கக்கூடிய செடி கொடிகளை அகற்றி விட வேண்டும். காய்ந்திருக்கின்ற இலைகள் நமக்கு வீடுகளில் எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து சேர்க்கும்.
2. வீடுகளில் விலை உயர்ந்த பொருட்கள் உடைந்து இருந்தாலும் சிலர் அதை அகற்றாமல் வைத்திருப்பார்கள். அப்படியாக, பழைய மற்றும் உடைந்த பொருட்கள் அல்லது காலணிகள் இருந்தால் அதை நாம் ஹோலி பண்டிகை முன்னால் அகற்றி விடுவது நன்மை அளிக்கும்.
3. வீடுகளில் எந்த சூழ்நிலையிலும் உடைந்த கண்ணாடி பொருட்களை வைத்திருக்கக் கூடாது. இவை வீடுகளில் சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தக்கூடும்.
4. அதேபோல் உடைந்த சுவாமி படங்கள் அல்லது சிலைகள் போன்றவை வீடுகளில் இருத்தல் கூடாது. இவை நமக்கு ஒரு சில தடை தாமதங்களை கொடுத்து விடும்.

5. அவ்வப்போது வீடுகளில் உடைந்த எலக்ட்ரானிக் பொருட்களையும் நாம் அகற்றி விட வேண்டும். இவை நம் வீடுகளில் தேங்கி இருக்கும் பொழுது அவை நமக்கு அதிர்ஷ்டம் வந்து சேர்வதை தடுக்கிறது.
மேலும், இந்து மதத்தில் ஒவ்வொரு பண்டிகையும் நம்முடைய ஆன்மாவையும் நம்முடைய சுற்றத்தையும் புதிது படுத்தும் வகையில் தான் அமைந்திருக்கிறது. அந்த வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நம் மனதில் இருக்கக்கூடிய அழுக்குகளையும் வீடுகளில் சூழ்ந்து இருக்கக்கூடிய உடைந்த பொருட்களையும் அகற்றி ஒரு புதிய பயணத்தையும் வாழ்க்கையையும் தொடங்குவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |