ஜோதிடம்: காரிய வெற்றிகளை உணர்த்தும் சகுனங்கள்

By Sakthi Raj May 18, 2025 10:34 AM GMT
Report

நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் சகுனங்கள் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதாவது நாம் மிகுந்த குழப்பத்தோடு வெளியே செல்லும் பொழுது, அந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் சில சகுனங்களை நாம் பார்க்க முடியும்.

அவை நாம் செல்லும் காரியங்கள் வெற்றி பெறக்கூடிய சகுனமாகவும் இருக்கலாம். அல்லது காரிய தடங்களுக்கான சகுனமாகவும் இருக்கலாம். அப்படியாக, நாம் ஒரு முக்கியமான காரியத்திற்காக வெளியே செல்லும் பொழுது இவ்வாறான சகுனங்கள் நம் கண்களுக்கு தெரிந்தால் அவை நமக்கு வெற்றியை தருகிறது என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

பகவத் கீதை: ஒரு மனிதனின் அன்பு எப்படி இருக்க வேண்டும்?

பகவத் கீதை: ஒரு மனிதனின் அன்பு எப்படி இருக்க வேண்டும்?

1. நாம் ஒரு முக்கிய விஷயமாக வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது தண்ணீர் குடம் தூக்கிக்கொண்டு எதிரே பெண்கள் சென்றால் அவை மிக அதிர்ஷ்டமான சகுனமாக பார்க்கப்படுகிறது. நிறை குடம் ஐஸ்வர்யத்தையும், செல்வத்தையும், மகாலக்ஷ்மி அம்சத்தையும் குறிக்கும்.

2. நாம் நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டுதல் வைத்து வெளியே செல்லும் பொழுது நமக்கு பிடித்த நபர் நமக்கு எதிரே வந்தால் அவை நல்ல சகுனமாகும்.

3. இந்து மதத்தில் காகம் நம் முன்னோர்களின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அப்படியாக, நாம் வெளியே செல்லும் பொழுது காகம் இடமிருந்து வலமாக சென்றால் அந்த காரியம் வெற்றியடையும் என்று சொல்லப்படுகிறது.

4. அதே போல் செல்லும் வழியில் கர்ப்பிணி பெண்களை நாம் பார்த்தாலும் அவை மிக சிறந்த சகுனமாக சொல்லப்படுகிறது.

5. பலரும் நல்ல காரியத்திற்காக நாம் வெளியே செல்லும் பொழுது இறந்தவர்களின் உடலை எடுத்து சென்றால் அது நல்ல சகுனம் இல்லை என்பார்கள். ஆனால் அவ்வாறு செல்லும் பொழுது அவையும் வெற்றிக்கான சகுனமாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், எந்த ஒரு சுப காரியம் செய்யும் முன் நாம் குடும்பத்தில் சண்டையிட்டு வெளியே செல்லக்கூடாது. அவ்வாறு செல்லும் பொழுது காரியம் நல்ல முடிவை தராது.

ஆதலால் காரியம் வெற்றி அடைய பூஜை அறையில் விளக்கு ஏற்றி சுவாமியை நன்றாக பிரார்த்தனை செய்து வழிபாடு செய்துகொண்டு கிளம்பினால் நினைத்த காரியம் நடக்கும். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US