ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் கருப்பு கயிறு
நம்முடைய வீட்டில்கையில் மற்றும் இடுப்பில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கருப்பு கயிறு கட்டி விடுவதை பார்த்திருப்போம்.அந்த கருப்பு கயிறு பலரும் திருஷ்டி கயிறாக எண்ணுவதுண்டு.இப்பொழுது உண்மையில் கருப்பு கயிறு காட்டுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளும் அதை யார் அணியலாம் அணியக்கூடாது என்றும் பார்ப்போம்.
இடுப்பில் கருப்பு கயிறு அணிவதை சிறப்பாக கருதுகின்றனர்.நாம் அணியும் கருப்பு நூலிற்கு உடலில் நுழையும் எதிர்மறை ஆற்றலை தடுத்து உள்வாங்கிக்கொள்ளும் சக்தி உள்ளது. மேலும் ஒருவர் இந்த கருப்பு கயிறு அணியவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் அவர்கள் அதை அணிவதற்கு முன்பு சனிபகவான் கோவிலுக்கு எடுத்துச்சென்று, சனி பகவானை வணங்கிவிட்டு அணியலாம்.
சிவப்பு நூல் அல்லது வேறு நிற நூல் கட்டியிருந்தால் அதனுடன் சேர்த்து கருப்பு நூலை கட்டக்கூடாதாம்.மேலும் இந்த கருப்பு கயிறை யார் வேண்டுமானாலும் அணிய கூடாது என்கிறார்கள்.அதாவது யாருடைய ஜாதகத்தில் ராகு கேது பலவீனமாக இருக்கிறதோ அவர்கள் இந்த கருப்பு கயிறு அணிவதன் மூலம் பலன்கள் பெறலாம் என்கிறார்கள்.
மேலும் அஷ்டம சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி காலங்களில், கறுப்பு கயிறு கட்டிக்கொள்வதால், சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள், கண் திருஷ்டி விலகும். பொருளாதார பிரச்சனை உள்ளவர்களும் கருப்பு கயிறு கட்டுவார்கள்.. சிலர் கருப்பு கயிறை காலில் அணிவதை பார்த்திருப்போம்.
பொதுவாக அதை காலில் அணிவதை தவிர்த்துவிட்டு இடுப்பு, இடது கை, கழுத்து இப்படி கருப்பு நூலை அணிய சொல்கிறார்கள். குழந்தைகளுக்கு கருப்பு கயிறுகளை கழுத்தில் கட்டிவிடலாம்.பெண்கள் இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் கருப்பு கயிறை கட்டிக் கொள்ளலாம்.
நீண்ட நாள் பணப்பிரச்சனை கடன் தொல்லை இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை சனிபகவானை வழிபாடு செய்து அணிந்து கொள்வதால் பாதிப்புகள் குறைகிறது என்கின்றனர்.மேலும் சனி பகவானை மனதார வணங்கி, கருப்பு கயிறில் 9 முடிச்சுகளுடன் அணிவதால், பொருளாதார நிலைமை மேம்படும் என்பது நம்பிக்கை.
ஆனால், இந்த 9 முடிச்சுகளும் தனித்தனியாக இருப்பது நல்லது. இந்த கருப்பு கயிறை தாமாக முன்வந்து கழட்டுவது கூடாது.அதுவாகவே கழண்டு விழலாம் அல்லது கயிறு ரொம்ப பழையதாகிவிட்டால் நீக்கலாம்.அப்படியே நீக்கினாலும், அதனை அரச மரத்தடியில் வைத்துவிட்டு, ஒரு புதிய நூலை கட்டிக்கொள்ளலாம்.
இந்த கருப்பு கயிறானது சூரிய ஒளியிலிருந்து வீசும் கதிர்களை உள்வாங்கிக்கொள்ளும் சக்தி கொண்டது.எனவே, இந்த கயிறு கட்டுவதால் பலகாலமாக குணமடையாத தீராத நோயும் தீரும் என்று நம்பப்படுகிறது.இதை கையில் இடுப்பில் அணிந்து கொள்வதால் நாம் பல பாதிப்புகள் இருந்து நம்மை காத்து கொள்ள முடிகிறது
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |