திருச்சிற்றம்பலம் என்றால் என்ன?
சிவ பக்தர்கள் அனைவரும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி தான் யாரிடமும் உரையாடலையே தொடங்குவது உண்டு.
அப்படியாக அந்த திருச்சிற்றம்பலம் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
சிவனை வழிபட அவன் அருள் வேண்டும்.அதாவது அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்பது போல் அவன் பரிபூர்ண அருள் இருந்தால் மட்டுமே கைகள் கூப்பி சிவாயநம என்று சொல்லி மனதார அவனின் அனந்த கண்ணீரை அனுபவிக்க முடியும்.
அப்படியாக திருச்சிற்றம்பம் என்று எவர் ஒருவர் வாயில் முதல் வார்த்தையாக பேசும் பொழுது வருகிறதோ,அவர்கள் தான் தில்லை கூத்தனின் அடியார்கள்.
அடியார்கள் எதையும் விரும்புவது இல்லை சிவனை தவிர.அப்படியாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடனமாடும் இடம் தான் திருச்சிற்றம்பலம்.ஞான வடிவும் ஆகாய மயமும் ஆன பொற்சபை என்பது இதன் பொருள்.
சித் என்றால் அறிவு என்றும் அம்பலம் என்றால் ஆகாயம் என்று பொருள்.
ஒருவர் திருச்சிற்றம்பலம் என்று சொல்ல சொல்ல அவரை அறியாமல் பார்க்கும்பொழுதும் பேசும் பொழுதும் அனைத்து பாவச்செயல்களும் நீங்கிஆன்மாவிற்கு புன்னியம் சேர்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |