பாவங்களை போக்கும் சனீஸ்வர பகவான்

By Sakthi Raj Aug 03, 2024 08:30 AM GMT
Report

சனிபகவான் என்றாலே எல்லோருக்கும் ஒருவித பயம் இருக்கும்.கட்டாயம் அவர் வாழ்க்கையில் வர எதிர்பாராத மாற்றங்கள் திருப்பங்கள் ஏற்படும்.

அப்படியாக சனிதோஷம் சனி திசை என்றால் நாம் சென்று தரிசித்து வர வேண்டும் என்று நினைப்பது திருநள்ளாறு சன்சீஸ்வரர் தான்.அப்படியாக திருநள்ளாறு சனீஸ்வரர் பகவானின் சிறப்புக்கள் பற்றி பார்ப்போம்.

இங்கே கோவில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப் பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார் என்பது நம்பிக்கை.

பாவங்களை போக்கும் சனீஸ்வர பகவான் | Thirunallaru Sani Bagavan Sani Peyarchi Valipadu

ஒரு முறை சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி,ஏழரை ஆண்டு சனி பிடித்து,எல்லா துன்பங்களையும் அனுபவித்து வந்தார்.

அந்த சமயத்தில் மனைவியையும்,குழந்தைகளையும் விட்டு விட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க சுய உருவத்தை இழக்க நேரிட்டது.

இறுதியாக அயோத்தி அரசனிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார்.நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து வேதனை அடைந்தாள்.

பழனி மலை முருகனின் வியப்பூட்டும் தகவல்கள்

பழனி மலை முருகனின் வியப்பூட்டும் தகவல்கள்


நளமகராஜனின் இந்த பிரமை நீங்க திருநள்ளாறுக்கு அவர் குடும்பத்துடன் வந்து வழிபட ஏழரை சனியின் கொடுமை நீங்கியதாகத் வரலாறு.

"நிடத நாட்டு அரசன் நள சக்கரவர்த்தி!

நீ அரசர்களுள் சிறந்தவன்!

தோல்வியை அறியாதவன்!

பாவங்களை போக்கும் சனீஸ்வர பகவான் | Thirunallaru Sani Bagavan Sani Peyarchi Valipadu

உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன்.உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ,அவர்களை நான் காப்பேன்" என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார்.

மேலும்,"நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்கு.இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும்" என்று சனிபகவான் வரம் அருளினார்.

நளனும் நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை வைகாசி மாதம் புனர்பூச நாளில் நடத்தி இறைபணி செய்து வந்தார் என்பது வரலாறு.

திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் "ஈசுவர பட்டம்" பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US