எமன் சந்நிதி கொண்ட சிவன் கோயில்
மனிதன் வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை.அப்படியாக நாம் மனதார நம்பும் இறைவனை நினைத்து எந்த ஒரு காரியம் செய்ய நம்முடைய பிரச்சனைகள் எல்லாம் தீரும். பொதுவாக சிலருக்கு மிகவும் இயல்பான விஷயங்கள் நடப்பதில் தாமதம் ஆகும்.அப்பொழுது அவர்களுக்கு ஒரு விரக்தி உண்டாகும்.
அதாவது சாதாரண விஷயத்திற்கு கூட நான் வாழ்க்கையில் எவ்வளவு போராட்டங்கள் சந்திக்க வேண்டுமா?என்று அவர்கள் மனம் குழம்பி போவார்கள்.அதில் மிக முக்கியமான ஒன்று திருமணம்.என்னதான் அவர்களுக்கு திருமணம் பந்தம் கைகூடுவது போல் வந்தாலும் இறுதியில் அது நடக்காமல் போய் விடும்.
அப்பொழுது அவர்களுக்கு வாழ்க்கையை கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல் இருக்கும்.நடக்கும் தடங்கல் எதனால் என்று அறியாமல் மிகவும் சிரமம் படுவார்கள்.அப்பொழுது ஜாதகம் பார்த்தால் தான் தெரியும் அவர்களுக்கு திருமணத்தில் தோஷம் இருக்கிறது என்று.
திருமண தோஷம் என்பது தீர்க்க முடியாத தோஷம் இல்லை.நாம் மனதார இறைவனை நினைத்து வழிபாடு செய்ய திருமண தோஷம் விலகும்.திருமணம் தோஷம் விலக எந்த இறைவனை வணங்கினாலும் நல்லதோர் தீர்வு கிடைக்கும் என்றாலும்,அந்த தோஷத்திற்கான பிரத்யேக கோயிலுக்கு செல்ல நாம் பிறவி பலனையும் அடையலாம்.
நாம் இப்பொழுது திருமண தோஷம் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் தடங்கலுக்கு நாம் சென்று தரிசிக்க வேண்டிய இறைவனையும் அதன் வரலாற்றையும் பற்றி பார்ப்போம்.
கோயில் வரலாறு
திருமண தோஷம் விலக நாம் செல்ல வேண்டிய ஆலயம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் இருக்கும் மிகவும் பழமையான திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோயில் ஆகும்.ஞீலி” என்றால் இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படும் “கல்வாழை” எனப்படும் அறிய வகை வாழை மரத்தின் பழம்.
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தல விருட்ச மரம் சிறப்பாகும் அந்த வகையில் இந்த கல்வாழை மரம் தான் இந்த திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலின் “தல விருச்சம்” ஆகும்.
இங்கிருக்கும் வாழை மரங்கள் நிறைந்த தோட்டம் “ஞீலிவனம்” என அழைக்கப்படுகிறது.மேலும் இக்கோயிலின் இறைவன் பெயர் ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் இறைவி பெயர் விசாலாட்சி.
எமன் சந்நிதி
இக்கோயிலில் எமனை வணங்குவது சிறப்புக்குரிய விஷயம் ஆகும்.அதாவது இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சந்நிதியைக் நாம் பார்க்க முடியும்.இச்சந்நிதி ஒரு குடைவரைக் கோவிலாகும்.
பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார்.
இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்பூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான்.
இதனால் உலகில் இறப்பு என்று இல்லாமல் போனது.இதனால் பூமி மிகவும் பாரம் ஆனது.பூமி பாரம் தாங்காமல் பூமாதேவி மிகவும் துன்பம் அடைந்தால்.இதற்கு மேலும் சென்றால் பூமி தேவி மிகவும் என்று எண்ணி தெய்வர்கள் சிவபெருமானிடம் மீண்டும் எமன் உயிர் பெற்று அவர் வேலையை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள சிவபெருமானும் எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.
சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞிலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை.
இராவண வாயில்
இக்கோயிலில் இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக சென்றால் சுவாமி சந்நிதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இருக்கும்.அதில் தான் நாம் சுவாமியை தரிசிக்க இறங்கி செல்ல வேண்டும்.இந்த படிகளுக்கு தனி சிறப்பு இருக்கிறது.
அதாவது இந்த படிகள் இராவணின் சபையில் ஒன்பது நவக்கிரங்களும் அடிமைகளாக இருந்ததை குறிப்பிடுவதாக சொல்கிறர்கள். சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்கள் ஆக எண்ணி பக்தர்கள் வணங்குகின்றனர்.
மேலும் இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேஸ்வரர் சந்நிதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி ஒரு சுயம்பு லிங்கமாகும்.
எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படுகிறார்.இக்கோயிலில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன.
இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள்.
நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்வதால் விரைவில் திருமணம் கைகூடும்.
பரிகாரங்கள்
ஏற்கனவே சொன்னது போல் இக்கோயில் திருமண தோஷத்தை போக்க கூடிய அற்புதமான திருத்தலம்.திருமணம் தடை மற்றும் தாமதம் ஆகும் ஆண் மற்றும் பெண் இந்த திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்று கிழமை தினங்களில் பரிகாரம் செய்ய செல்வது சிறந்தது.
அதாவது திருமணம் ஆகாத ஆண் பெண் இக்கோயிலுக்கு வந்து கல்வாழைக்கு மாங்கல்யம் கொண்டு தாலிகட்டி தங்கள் பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பூஜை சடங்குகளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள்ளாக செய்து முடித்து விடுவது நல்லது.
பின்பு நாம் தல இறைவனான “திருப்பைஞ்சீலி நீலிவனநாதர், ஸ்ரீ விஷாலக்ஷி அம்பாளையும்” அர்ச்சனை செய்து வழிபட்டு, கோவில் பிரசாதங்களை வாங்கி கொள்ள வேண்டும்.பின்பு எங்கேயும் செல்லாமல் நேரே வீட்டிற்கு செல்வது உகந்தது.
மேலும் அக்கோவில் வாங்கிய பிரசாதங்களை பூஜையறையில் வைத்து வழிபட்டு, அதில் கொடுக்கப்பட்டிருக்கும் குங்குமம், திருநீறு போன்றவற்றை திருமணம் நடக்க வேண்டிய ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் தங்களின் நெற்றியில் இட்டு வர வேண்டும்.
இந்த வழிபாட்டை சரியான முறையில் கடைபிடித்து வர நிச்சயம் அவர்ளுக்கு வாழ்க்கையில் உள்ள திருமண தடை விலகும் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |