திருவானைக்காவல் கோவிலில் ரூ. 1 கோடி மதிப்பில் புதிய கொடிமரங்கள்

By Yashini May 04, 2024 04:35 PM GMT
Report

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கொடிமரங்களில் திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலய பூஜை நேற்று நடந்தது.

இக்கோவிலில் உள்ள அஷ்டதிக்கு கொடி மரங்களுக்கும் மற்றும் சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்திற்கும் புதிய கொடிமரத் திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பாலாலயம் விழா நேற்று காலை நடந்தது.

முன்னதாக விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

திருவானைக்காவல் கோவிலில் ரூ. 1 கோடி மதிப்பில் புதிய கொடிமரங்கள் | Thiruvanaikaval Temple Rs 1 Crore Of New Flagpoles

அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனைகள் செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து குடங்கள் புறப்பட்டன.

பின்னர் பாலாலயத்திற்காக உள்ள சித்திர பிம்பங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது.

இந்த அஷ்டதிக்கு கொடி மரங்கள் மற்றும் சுவாமி சன்னதி பிரதான கொடி மரம் ஆகியவை சுமார் ஒரு ரூ. 1 கோடி மதிப்பில் செய்யப்படவுள்ளது.

மேலும் இப்பணிகள் ஓராண்டுக்குள் நிறைவுபெறும் என்று கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US