திருவண்ணாமலையில் உத்தராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

By Yashini Jan 06, 2025 08:10 AM GMT
Report

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு அலங்கார ரூபத்தில் சாமி அம்பாள் எழுந்தருள, வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

முன்னதாக அதிகாலையில் சம்பந்த விநாயகர், உண்ணாமலை சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் உத்தராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் | Thiruvannamalai Uttarayana Punniakala Brahmotsava

உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் சாமி அம்பாள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.

மாட்டு பொங்கல் தினத்தன்று சாமி அம்பாள் அருணாசலேஸ்வரர் கோவில் திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி தந்து மாட வீதியில் வலம் வருவர்.

திருவண்ணாமலையில் உத்தராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் | Thiruvannamalai Uttarayana Punniakala Brahmotsava

மாடவீதியில் 3 முறை வலம் வந்த பின்னர் மாலையில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும், மாட்டுப் பொங்கல் தினத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு பலகாரங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.     

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US