இந்தியாவிலேயே முதலில் நடை திறக்கப்படும் கோயில் எது தெரியுமா?

By Sakthi Raj Sep 25, 2026 02:30 PM GMT
Report

பொதுவாக, நாம் கோவில் என்றால் காலை 4 மணி போன்ற அதிகாலை நேரத்தில் நடை திறக்கப்படுவதை நாம் பார்க்கின்றோம். இருப்பினும் நமக்கு ஒரு கேள்வி வரலாம். இந்தியாவிலேயே முதன் முதலில் நடை திறக்கப்படும் கோவில் எது என்று? அதைப் பற்றி பார்ப்போம்.

பலரும் இந்த கேள்விக்கு குருவாயூர் என்கின்ற ஒரு பதிலை சொல்வார்கள். ஆனால், இந்த இடத்தில் குருவாயூர், திருப்பதி அல்லது மதுரா இல்லை. திரு வார்ப்பு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவிலில் தான் இந்தியாவிலேயே முதல் முதலில் நடை திறக்கப்படுகிறது. இங்கு அதிகாலை இரண்டு மணிக்கு நடை திறந்து தரிசனம் செய்யப்படுகிறது.

இந்தியாவிலேயே முதலில் நடை திறக்கப்படும் கோயில் எது தெரியுமா? | Thiruvarppu Krishna Temple Opens At 2 Am

2026: அக்டோபர் மாதம் துலாம் ராசியினர் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்

2026: அக்டோபர் மாதம் துலாம் ராசியினர் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்

இதுக்கு பின்னால் சுவாரசியமான கதை உள்ளது. இந்த கோவிலில் இருக்கக்கூடிய கிருஷ்ண பகவான் ஹம்சனை வதம் செய்த பிறகு மிகுந்த பசியோடு இருந்தார் என்று கூறப்படுகிறது. ஆதலால் பெருமாள் பசி தாங்கமாட்டார் என்பதால் இங்கு எது தவறினாலும் கிருஷ்ண பகவானுக்கு நெய்வேத்தியம் தவறக்கூடாது என்பது கடைபிடிக்கப்படுகிறது.

அதிகாலை 2 மணிக்கு இங்கு விஷ்ணு பகவானுக்கு பால் பாயாசம் படைக்கப்படுகிறது. இது அந்த பகவான் கிருஷ்ணனுடைய கட்டளையாகவே கருதப்படுகிறது. மேலும், இங்கு ஒரு ஐதீகம் இருக்கிறது. காலையில் நடை திறக்க மேல் சாந்தியின் ஒரு கையில் சாவியும் மற்றொரு கையில் கோடாலியும் கொண்டு செல்வார்.

இந்தியாவிலேயே முதலில் நடை திறக்கப்படும் கோயில் எது தெரியுமா? | Thiruvarppu Krishna Temple Opens At 2 Am

6 மாதம் கருட மந்திரம் சொன்னால் தன் சக்தியின் ஒரு துளியை தரும் வருட பகவான்

6 மாதம் கருட மந்திரம் சொன்னால் தன் சக்தியின் ஒரு துளியை தரும் வருட பகவான்

அதாவது பூட்டு திறக்க முடியாமல் போனால் ஒரு நிமிஷம் கூட யோசிக்காமல் கோடாலியால் பூட்டை உடைத்தாவது பகவானுக்கு பாயாசம் நெய்வேத்தியம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவில் சூரிய கிரகணத்துக்கு கூட நடை சாத்தப்படாத கோவில் என்றால் அது இதுதான்.

ஏனென்றால் பகவானுக்கு பசி தாங்க மாட்டார் என்பதால் நடை சாத்தப்படாது. மேலும், இங்கு நெய்வேத்தியம் உண்ட பிறகு கிருஷ்ண பகவான் நேராக அம்பலப்புழா கிருஷ்ணர் கோவிலுக்கு செல்கிறார்.

அங்கே உலகப் பிரசித்தி பெற்ற மதியம் நேரங்களில் கொடுக்கப்படும் அம்பலபுழா பால் பாயாசம் சாப்பிட்டு பிறகு அங்கிருந்து நேராக பத்மநாப சுவாமி கோவிலில் இரவு பிரசாதம் உண்கிறார். பிறகு காலை 2 மணிக்கு நேரடியாக அவர் வருகிறார் என்பதை இந்த கோவிலில் ஐதீகம். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US